Friday, February 26, 2010

ரகசியமானது காதல்...


படம்: கோடம்பாக்கம்?
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்


சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
(ரகசியமானது...)


கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல
(ரகசியமானது...)

Sunday, February 14, 2010

நெஞ்சோடு கலந்திடு...


படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்:

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு...)


கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புதுப் பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு...)


காலங்கள் ஓடும் இது கதையாகிப் போகும் -
கண்ணீர்த் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான்னிங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை...)
(நெஞ்சோடு...)