Tuesday, July 3, 2018

ஆதியாய் அனாதியாய்...


இறுவெட்டு: பரணி பாடுவோம்
இசை:
பாடியவர்கள்: SG சாந்தன்
வரிகள்:

ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ் (2)
அன்புக்கு விளக்கேற்றி
ஆறம் காத்ததெங்கள் தமிழ் (2)
ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ்

மேதினியில் வீரமதால்
மேன்மை கொண்டதெங்கள் தமிழ் (2)
மேலான தத்துவத்தின்
பொருள் சொன்ன ஞானத்தமிழ் (2)
ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்

திசை எட்டும் ஒலி கொட்டி
புகளிட்டு உரமிட்ட
செந்தமிழ் எங்கள் தமிழ்

திடமுள்ள நெஞ்சங்கள்
புடமிட்டு வாழ்ந்திட்ட
வேங்கையின் வீரத்தமிழ்

படை கொண்டு வந்தவர்
பகை வென்று விளையாடும்
பைந்தமிழ் நம் செந்தமிழ்

பாவலர் நாவலர்
காவலர் வீரம் அதை
பாடிப் புகழ்ந்திட்ட பைந்தமிழ்

குறுக்கத் தறித்த குறளால் உலகம்
தெளியத் தழைத்த செந்தமிழ்
குமாரி முதலாக இமையம் வரையாக
முடி கொண்டு வாழ்ந்த முத்தமிழ்

அடிமை ஆவதோ
பகைவன் பிடியில் மாள்வதோ
தமிழா ஆண்மை இல்லையோ
உரிமையில் ஆசை இல்லையோ

தூக்குங்கள் துப்பாக்கி
துணிந்து விட்டால் எவன் பாக்கி
தாக்குங்கள் தீமைகளை
தகர்த்திடுங்கள் எதிரிகளை

போக்குங்கள் பயம் தனை
புறப்படுங்கள் போர்க்களம்
போக்குங்கள் பயம் தனை
புறப்படுங்கள் போர்க்களம்
ஆக்குங்கள் தமிழ் ஈழம்
அனுபவிப்போம் சுதந்திம்
ஆக்குங்கள் தமிழ் ஈழம்
அனுபவிப்போம் சுதந்திம்
அனுபவிப்போம் சுதந்திம்
அனுபவிப்போம் சுதந்திம்