இறுவெட்டு: குருத்து வலி
இசை: வசீகரன்
பாடியவர்கள்: நித்தியஸ்ரீ மகாதேவன்
வரிகள்: வசீகரன்
தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும் (2)
தாய் நாட்டை பிரிந்து வாழ்கின்ற எமக்கு
நெருப்பாய் நினைவுகள் சுடுகின்றது
நெடு நாள் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில்
வலியாய் வெளியே விழுகின்றது (2)
எங்கள் வயல்வெளி எங்கும் காலாற நடந்தால்
இதயம் மகிழ்ந்துவிடும் (2)
காதோரம் வந்து கன்னத்தைத் தழுவி (2)
காற்றும் முத்தமிடும் - இளம்
காற்றும் முத்தமிடும்
காதோரம் வந்து கன்னத்தைத் தழுவி
காற்றும் முத்தமிடும் - இளம்
காற்றும் முத்தமிடும்
துன்பத்தை தாங்கி வாழ்கின்ற வழியை (2)
பனைமரக் காடுகள் கற்றுத்தரும்
பனைமரக் காடுகள் கற்றுத்தரும் - எங்கள்
பனைமரக் காடுகள் கற்றுத்தரும்
தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும்
வானிலே பறந்துவரும் பறவைக்கு உலகம்
தடை ஏதும் விதிப்பதில்லை
நாடிழந்த மனிதன் பூமியில் வாழ
எத்தனை தடைகள் அடி (2)
நாடிழந்த மனிதன் பூமியில் வாழ
எத்தனை தடைகள் அடி
சிறகொடிந்த பறவை போல் நாடிழந்த மனிதனும்
உலகத்தில் அகதியடி (2)
மொழி இழந்த மனிதனும் குரல் இழந்த பறவையும்
உலகத்தில் சுழியம் அடி (2)
உலகத்தில் சுழியம் அடி (2)
கால காலமாக நாங்கள்
வாழ்ந்திருந்த தேசம்
கண்ணீர்க் கடலில் மூழ்கி மாண்டு போவதோ (2)
பண்டார வன்னியன் படை நடந்த தேசம்
குருதிக் கடலில் மூழ்கி மாண்டு போவதோ (2)
தேசியத் தலைவனின் படை நடந்த தேசம் (3)
பாதகத்தால் வெந்தழிந்து சாய்வதோ
துரோகத்தாலே கறை படிந்து வீழ்வதோ
பெற்ற தாய் தந்தையை இழந்துவிட்ட பிள்ளைகள்
எத்தனை ஆயிரம் எங்கள் மண்ணிலே
எத்தனை ஆயிரம் எங்கள் மண்ணிலே
கால நதி எங்குமே விழிகளில் கங்கையே
காயங்கள் ஆற மருந்தில்லையே
காயங்கள் ஆற மருந்தில்லையே - எங்கள்
காயங்கள் ஆற மருந்தில்லையே
தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும் வேண்டும் (2)
தாய் நாட்டை பிரிந்து வாழ்வது கொடுமை
தாய் நாட்டில் வாழ்ந்து சாவதில் பெருமை
தாய் நாட்டில் வாழ்ந்து சாவதில் பெருமை
தோழர்கள் தோழியர் குருதியில் குளித்த மண்ணை (2)
கோடிமுறை வணங்கிட வேண்டும் (2)
கோடிமுறை வணங்கிட வேண்டும் - நாங்கள்
கோடிமுறை வணங்கிட வேண்டும் (2)
தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வேண்டும்