Tuesday, May 16, 2023

கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக் கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம் நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால் படித்தவர்களுக்கும், அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், செல்வவாழ்க்கையையுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மையானகுற்றமற்ற தத்துவ ஞானத்தையும், ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல தவஞ்செய்யும் முனிவர்களுக்கும், சாதி ஒன்றே; நன்மை தீமை இல்லை; உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை