Saturday, January 30, 2010

நலம் வாழ என்னாளும்...


படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்:

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

Saturday, January 23, 2010

மழையே மழையே...


படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்

மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே...)


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ


உன் ஆடைபட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது

போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே...)
(மழையே...)

Monday, January 11, 2010

ஒரு சின்னத் தாமரை...


படம்: வேட்டைக்காரன்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்:
வரிகள்:

ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே

என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்... உயிரே
(ஒரு சின்னத் தாமரை...)


உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன்தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்

என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்

உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்

(ஒரு சின்னத் தாமரை...)


உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள்
மட்டும் மோட்சத்தினை சேரும்

அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது

உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது

(ஒரு சின்னத் தாமரை...)