Saturday, April 24, 2010

காதல் இல்லை சாதல் இல்லை...


படம்: ABCD
இசை: D இமான்
பாடியவர்கள்: D இமான்
வரிகள்: சரவண சுப்பையா



காதல் இல்லை சாதல் இல்லை
உறவேதும் இல்லையே
இனி நம் வாழ்வில் யாரோ

யாருக்கு யார் சொந்தம்
எங்கிருந்து நாம் வந்தோம்
நமக்குள்ளே நாம் போடும் பந்தம்
இந்த சொந்தம்

தாயின் வயிற்றில் முன்னூறு நாள்
மனைவி சுகத்தில் தொண்ணூறு நாள்
இடையில் வருவதெல்லாம் எதை சொல்லும் நாள்
எதை சொல்லும் நாள்


கட்டிய கணவன் கட்டிலில் உறவு
மோகமும் தாக்கமும் தொட்டிலில் முறிவு
அவன் காட்டிடும் அன்பும்
அவன் ஊட்டிடும் உறவும்
எத்தனை நாள் பந்தம்

மாடி வீட்டு செவத்த பொண்ணு
கூரை வீடு கறுத்த பையன்
கடைசியில போற இடம் சொல்லு
பொறக்கிறப்போ மனுஷ ஜாதி
இறக்கிறப்போ என்ன மீதி
கடைசியில போற இடம் மண்ணு - ஆறடி மண்ணு


உடம்பில் ஒன்பது வாசல்கள் உண்டு
இருவர் இணைந்து திறப்பது ஒன்று
அட வாழ்க்கையின் கதையை - அந்த
இறைவனும் எழுத
படிக்க மறந்த மனிதா

பிறவி நூறு எடுத்த போதும்
எடுத்த பிறவி முடித்த போதும்
ஜென்மங்கள் கரை சேருதே
உன் கருமாக்கள் மலை ஏறுதே
அந்த ஆன்மாக்கள் அழியாததே