Sunday, May 30, 2010

பூ மீது யானை...


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: மால்குடி சுபா
வரிகள்:

பூ மீது யானை
பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை
போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில்
அட ஏன்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள்
இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே

இலைகள் உதிர்வதால்
கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ
மறந்து காற்றில் போகுதே

(பூ மீது யானை...)


உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

காதல் போலவே
நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய்
பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

(பூ மீது யானை...)


விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

வேறு வேறென
நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்!

(பூ மீது யானை...)
(பூ மீது யானை...)

Saturday, May 29, 2010

உனக்கென இருப்பேன்...


படம்: காதல்
இசை:
பாடியவர்கள்:
வரிகள்: நா முத்துக்குமார்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே... கண்மணியே...
அழுவதேன்... கண்மணியே...
வழித்துணை நான் இருக்க...

(உனக்கென இருப்பேன்...)


கண்ணீர் துளிகளைக் கண்கள் தாங்கும்
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா

மின்சாரக் கம்பிகள் மீதும்
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத் தாண்டும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வரும் காலம் காயம் ஆற்றும்

நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்
(உனக்கென இருப்பேன்...)


தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்
தோழியே இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகித் தீக் குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்

விழி மூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்

நான் என்றால் நானேயில்லை
நீதானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்

(உனக்கென இருப்பேன்...)

Wednesday, May 12, 2010

கவிதை கேளுங்கள்...


படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
வரிகள்: வைரமுத்து

கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்

நடனம் பாருங்கள்
இதுவும் ஒரு வகை யாகம்

பூமி இங்கு
சுற்றும் மட்டும்
ஆட வந்தேன்
என்ன நட்டம்
(பூமி...)

ஓடும் மேகம்
நின்று பார்த்து
கைகள் தட்டும்
(கவிதை...)


நேற்று என் பாட்டில்
சுதியும் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே

காலம் நேரம்
சேரவில்லை
காதல் ரேகை
கையில் இல்லை

சாக போனேன்
சாகவில்லை
மூச்சு உண்டு
வாழவில்லை

வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை
கண் திறந்தேன்
பார்வை இல்லை

தனிமையே
இளமையின்
சோதனை

புரியுமா
இவள் மனம்
இது விடுகதை
(கவிதை...)


ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

பாறை மீது
பவள மல்லிகை
பதியம் போட்டதாரு

ஓடும் நீரில்
காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு

அடுப்பு கூட்டி
அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு

அலையில் இருந்து
உலையில் விழுந்து
துடி துடிக்குது மீனு

இவள் கனவுகள் நனவாக
மறுபடி ஒரு உறவு

சலங்கைகள் புது இசை பாட
விழியட்டும் இந்த இரவு

கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில்
கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும்
மனமும் வெளுக்கட்டும்

ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

.!

Saturday, May 8, 2010

தோழா தோழா...


படம்: பாண்டவர் பூமி
இசை:
பாடியவர்கள்: யுகேந்திரன், சுஜாதா
வரிகள்:

தோழா தோழா...
கனவுத் தோழா...

தோழா தோழா...
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டால் காதலாகுமா

அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?


நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூலெடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லிய உண்மை

இப்ப நீயும் நானும் பழகுறமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு

காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்

ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்

ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா
கனவுத் தோழா

தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைபப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்.

உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

Thursday, May 6, 2010

கண் பேசும் வார்த்தைகள்...


படம்: 7G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா முத்துகுமார்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை


காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி


உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித் துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
(கண் பேசும் வார்த்தை....)