Thursday, September 15, 2011

கனவா இல்லை காற்றா...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வாலி

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக் கொண்டே
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாலும்...
சந்திர தரையில் பாய் இடவா

(கையில் மிதக்கும்...)


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி - (2)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது - (2)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது - (2)
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

(கையில் மிதக்கும்...)
(கையில் மிதக்கும்...)

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...

Monday, September 12, 2011

பூ வாசம்...


படம்: அன்பே சிவம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சாதனா சர்கம், விஜய் பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி!


புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்...)


ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே
வா வா............
(பூ வாசம்...)

நீல வானம்...


படம்: மன்மதன் அம்பு
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல் ஹாசன்

நீல வானம்...
நீயும் நானும்...
கண்களே பாஷையாய்...
கைகளே ஆசையாய்...
வையமே கோயிலாய்...
வானமே வாயிலாய்...
பால்வெளி பாயிலே...
சாயுந்து நாம் கூடுவோம்...

இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே!

நீல வானம் Blue Sky
நீயும் நானும் You and I


ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது
இன்னொரு உயிர்தானடி........
(நீல வானம்...)


பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம் (3)


ஆறாத காயங்களை
ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு
கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது
இன்னொரு உயிர்தானடி......
(நீல வானம்...)

Wednesday, August 24, 2011

பாதி காதல் பாதி முத்தம்...


படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன், லெஸ்லி
பாடியவர்கள்: Bombay ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி
வரிகள்:

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா... ஓ...
மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை... எரியுதடா...
(பாதி காதல்...)

உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா...
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா!


மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும். ஹோ....
நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்...
என் வயது... வலிக்குதடா...

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா...
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா!


காதல் என்னை... காதல் செய்ய...
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்...
பூனை போல... உள்ளே வந்தாய்...
பானை இருக்கும் திசையை காட்டினேன்...
பயந்து கொண்டே... இதழ் குடித்தாய்...
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்


ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

(பாதி காதல்...)
(உதட்டில் எனை...)

உயிரை தொலைத்தேன்....


படம்: காதல் வேண்டும்
இசை: ஜெய்
பாடியவர்கள்: திலீப் வர்மன்
வரிகள்:

உயிரை தொலைத்தேன்...
அது உன்னில்தானோ...
இது நான் காணும் கனவோ நிஜமோ...
மீண்டும் உன்னை காணும் வரமே...
வேண்டும் எனக்கே மனமே மனமே...
விழியில் விழுந்தால்... ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே..
(உயிரை...)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே...)

உனை சேரும் நாளை...
தினம் ஏங்கினேனே...
நானிங்கு தனியாக அழுதேன்...
விடியும் வரை...
கனவின் நிலை...
உனதாய் இங்கு...
தினம் ஏங்குது...
மனம் உருகிடும்...
நிலை இது...
எந்தன் முதல் முதல் வரும்...
உயிர் காதலில்...
(உயிரை...)


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே...
உன்னோடு நான் மூழ்கினேன்...
(நினைத்தால்...)

தேடாத நிலையில்...
நோகாத வழியில்...
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்...
(விடியும்...)
(உயிரை...)