Thursday, September 15, 2011

கனவா இல்லை காற்றா...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வாலி

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக் கொண்டே
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாலும்...
சந்திர தரையில் பாய் இடவா

(கையில் மிதக்கும்...)


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி - (2)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது - (2)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது - (2)
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

(கையில் மிதக்கும்...)
(கையில் மிதக்கும்...)

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...