Friday, October 23, 2009

ஆனதென்ன... ஆவதென்ன...


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பென்னி தயாள்
வரிகள்:

ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

ஏதுமில்லா என் நினைவில்
என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில்
சாரலும் அடிக்க

நேற்று காதல் இல்லை
என் நெஞ்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்


எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளங்கையால் மூடிக் கொண்டாய்
மிச்சம் இன்றிக் கரைந்தேன்

என்னை நீ வாங்கினாய்
எனக்குத் தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல்... இதுவோ...


ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்
என்னையே வெல்கிறாய்

Friday, October 16, 2009

முதல் முதலாக முதல் முதலாக...


படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், கிருஷ், ஹரினி
வரிகள்:

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே
விண்ணாளச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய்தாள நின்றேனே

ஒரு சொட்டுக் கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ
பிரம்மித்தேன் - ஹோ

ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்

(முதல் முதலாக...)
(முதல் முதலாக...)


ஒரு பார்வையின் நீளத்தை
ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் விழுந்தேனே
தூங்காமல் வாழ்வேனே

நதி மீது சருகைப்போல்
உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ

மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே

(முதல் முதலாக...)
(உன்னாலே உன்னாலே...)


நீ என்பது மழையாக
நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்

சரி என்று தெரியாமல்
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்

என் வசம் என் வசம்
இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே
என் காதல் கார் மேகம்

(உன்னாலே உன்னாலே...)

Thursday, October 15, 2009

ஜூன் போனால்...


படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கிரிஷ், அருண்
வரிகள்:

ஜூன் போனால் ஜூலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப் பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

என்னாச்சு தோணலையே
ஏதாச்சு தெரியலையே
நட்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே

நேற்று என்பதுன் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்தக் கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காகத்தான்... அன்பே
(நேற்று என்பதும்...)
(ஜூன் போனால்...)


அறைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதூகலமா
இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து கூரை செய்ததின்று

கறை இருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லை
(ஜூன் போனால்...)


இருப்போமா வெளிப்படையாய்
சிரிப்போமா மலர்க் குடையாய்
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே

ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை
(ஜூன் போனால்...)
(நேற்று என்பதும்...)
(நேற்று என்பதும்...)

அழகே சுகமா...


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்:

அழகே சுகமா - உன்
கோபங்கள் சுகமா (2)
அன்பே சுகமா - உன்
தாபங்கள் சுகமா (2)

தலைவா சுகமா... சுகமா...
உன் தனிமை சுகமா... சுகமா...
வீடு வாசல் சுகமா - உன்
வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா - உன்
பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா - உன்
தாபங்கள் சுகமா...


அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்

அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள்தான்
சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள்
போடாதா

வாழ்க்கை ஓர் வட்டம்போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா

அழகே சுகமா - உன்
கோபங்கள் சுகமா

Wednesday, October 14, 2009

எனக்கு பிடித்த பாடல்...


படம்: ஜுலி கணபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல்
வரிகள்:

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
(எனக்கு பிடித்த )


மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு பிடித்த)


வெள்ளிக் கம்பிகளைப்போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
(எனக்கு பிடித்த)

Tuesday, October 13, 2009

நினைத்து நினைத்து (M)


படம்: 7G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: KK
வரிகள்: நா முத்துகுமார்

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்


அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே


பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்

உயிரிலே என் உயிரிலே...


படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்
வரிகள்: வைரமுத்து

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
(உயிரிலே...)


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
(உயிரிலே...)


கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே
இந்தக் காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே...)

Sunday, October 11, 2009

விழியிலே என் விழியிலே...


படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல்
தினம் உன்னைத் தேடினேன்
என் கண்ணீர்த் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
(விழியிலே...)


இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
(விழியிலே...)


உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித் திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா...
(விழியிலே...)

Wednesday, October 7, 2009

கண்ணால் பேசும் பெண்ணே...


படம்: ரெண்டு
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்: வைரமுத்து

கண்ணால் பேசும் பெண்ணே
என்னை மன்னிப்பாயா
கவிதை தமிழில் கேட்டேன்
என்னை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே
என்னை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன்
என்னை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே
என்னை மன்னிப்பாயா
ஒரு கவிதை தமிழில் கேட்டேன்
என்னை மன்னிப்பாயா


நிலா.. பேசுவதில்லை
அது ஒரு குறை இல்லையே! ஹா...
குறை அழகென்று கொண்டால்
வாழ்க்கையில எங்கும் பிழையில்லையே.

பெண்ணே அறிந்து கொண்டேன்
இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே
மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது
சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிரையினுள்ளே
நிலவை தேட மாட்டேன்

வாழ்வு துவர்க்குதடி
வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து
சாபம் தீரடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)


எங்கே குறுநகை எங்கே
குறும்புகள் எங்கே...கூறடி ஹோ...
கண்ணில் கடல் கொண்ட கண்ணில்
புயல் சின்னம் ஏதோ தெரியுதடி

செல்லக்கொஞ்சல் வேண்டாம்
சின்ன சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்
பாதி சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்

வாழ்கை கடக்குதடி
நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ
ஈரம் செய்யடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)

நீ என் தோழியா இல்லை...


படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுஜாதா
வரிகள்:

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

என் உயிரை எத்தனை முறை
வேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள்
நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே
உந்தன் உயிர் காதலியாய்
மாற்றிக்கொள்
என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா


கையும் காலும் ஓடாது
கண் இமையும் வாடாது
கன்னி நெஞ்சம் தூங்காது
பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல்

இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காதில
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி
பிச்சு தாரேன் இதயத்த

கையகக் கட்டி வாயப் பொத்தி வேண்டுறன் தெய்வத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா


சொன்னா பேச்சை கேட்காது
அப்பா மூஞ்சிய பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே

உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கழண்டு போச்சுடி
எனக்குள்ளே நீயே வந்ததாலே
விடு விடு காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா

போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா...)