படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுஜாதா
வரிகள்:
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
என் உயிரை எத்தனை முறை
வேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள்
நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே
உந்தன் உயிர் காதலியாய்
மாற்றிக்கொள்
என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
கையும் காலும் ஓடாது
கண் இமையும் வாடாது
கன்னி நெஞ்சம் தூங்காது
பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல்
இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காதில
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி
பிச்சு தாரேன் இதயத்த
கையகக் கட்டி வாயப் பொத்தி வேண்டுறன் தெய்வத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
சொன்னா பேச்சை கேட்காது
அப்பா மூஞ்சிய பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே
உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கழண்டு போச்சுடி
எனக்குள்ளே நீயே வந்ததாலே
விடு விடு காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா
போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா...)