Friday, October 23, 2009

ஆனதென்ன... ஆவதென்ன...


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பென்னி தயாள்
வரிகள்:

ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

ஏதுமில்லா என் நினைவில்
என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில்
சாரலும் அடிக்க

நேற்று காதல் இல்லை
என் நெஞ்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்


எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளங்கையால் மூடிக் கொண்டாய்
மிச்சம் இன்றிக் கரைந்தேன்

என்னை நீ வாங்கினாய்
எனக்குத் தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல்... இதுவோ...


ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்
என்னையே வெல்கிறாய்