Thursday, July 30, 2009

சிறகுகள் வந்தது....


படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஜாவேட் அலி, மதுஸ்ரீ
வரிகள்: பா. விஜய்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

உன்னை உன்னை... தாண்டி செல்ல...
கொஞ்ச காலம்... கொஞ்ச தூரம்...
கொஞ்ச நேரம்... கூட என்னால் ஆகுமோ….
உன்னை உன்னை தேடித்தானே
இந்த ஏக்கம்... இந்த பாதை...
இந்த பயணம்... இந்த வாழ்க்கை ஆனதோ...

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே...

ஓ...
நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா
ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கே இருக்கிறாய்
வலித்தாலும் அன்பே அங்கு இருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின் வெளியே
இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்
உள்ளையே...

ஓ...
எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே

விழி நினைக்கிற நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஓர் புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே...
ஒரு இமை எங்கிலும் தேனீல் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வழியில் நோக
இடையினில் எப்படிக் கனவும் காணுமோ...

உன்னை உன்னை தாண்டிச் செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ...
உன்னை உன்னை தேடித் தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ...

நீதானே... நீதானே...


படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே.... நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்

ஏ…..ஏ….ஏ…

(சில இரவுகள்...)

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ... ஹேய்
என் விழியின் கருமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே... ஓ…..
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே…

உண்மைகள் சொல்வதும்
உணர்ச்சியை கொல்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே….

நீதானே... நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே... நீதானே என் இமைகளை நீவினாய்


நீ தேடத் தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் ஞாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே...........
நீதானே... நீதானே... நீதானே....
என் நரம்புக்குள்ளே...
நீதானே... நீதானே... நீதானே...
என் நரம்புக்குள்ளே....

பார்த்தும் கரைந்தேனடா...


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: சித்ரா, விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: ஆண்டாள் பிரியதர்ஷினி

பார்த்தும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டென மலர்ந்தேனடா

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்


எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய்
உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய்
இங்கும் அங்கும் எங்கும் உந்தன் விம்பம் பார்கிறேன்
தொட்டுப் பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்

ஞாபகங்கள் தொட்டா மாலை ஆடும்
மாய வலை ஒன்று நம்மை மூடும்

வார்த்தைகள் போதுமடி
வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை நொடி
நீ.... மதுரமடி

பார்த்தும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டென மலர்ந்தேனடா

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே


கேட்கும் போது இல்லை என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் எல்லை மீற வைக்கிறாய்
என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பொய்யுதே
பார்க்கும் யாவும் இப்போதெல்லாம் அழகானதே

காதலின் வெப்பம் நம்மைத் தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கமும் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் உறைந்தேனடா
மீண்டுமே ஜனித்தேனே நான்
சட்டென மலர்ந்தேனடா

அது ஒரு காலம்...


படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள்: ஹரி சரண், பிரேம்ஜி அமரன்
வரிகள்: லலிதானந்த்

அது ஒரு காலம்... அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும்... மறந்திடு நீயும்
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்

ஹேய்... ஜோடியாய் இருந்தாள்... ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாள்... மொத்தமாய் அழத்தானா தானா
ஹேய்... துள்ளித் தான் திரியும்... பிள்ளையாய் இரு நீயும்
துன்பம் தான் மறந்து... பட்டம் போல் பற எப்போதும்

அது ஒரு காலம்... அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும்.... நீயும் நானும்.... நீயும் நானும்...

ஓ... இதயம் என்பது வீடு... ஒருத்தி வசிக்கும் கூடு,
அதிலே... அதிலே... தீ மூட்டிப் போனாள்,
உலகம் என்பது மேடை... தினமும் நடனம் ஆடு
புதிதாய்... ததும்பும்... நதி போல ஓடு
நெஞ்ஜோடு பாரம் தந்தாள்... தூரத்தில் துக்கிப்போடு!
கண்ணோடு ஈரம் தந்தாள்... இன்னொரு பெண்ணைத் தேடு!

ஓ... நான் போகப் பாதை எது... வானில் மிதக்கலாம்!
வலி போற வார்த்தை எது... எல்லாம் மறக்கலாம்!
எனக்கே... எனக்காய்... அவள் என்று வாழ்ந்தேன்
அவள் ஏன்... வெறுத்தாள்... அடியோடு சாய்ந்தேன்!

அது ஒரு காலம்... அழகிய காலம்,
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்....
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்.....
நீயும் நானும்.... நீயும் நானும்.... நீயும் நானும்...

ஓ... அவளைப் பிரிந்து நானும்... உருகும் மெழுகு ஆனேன்
அவளின்... நினைவால்... எரிந்தேனே நானே!
ஓ... பழகத் தெரியும் வாழ்வில்... விலகத் தெரிய வேண்டும்
முடிந்தால்... மனதில்... துயரில்லைத்தானே.....
கல்வெட்டாய் வாழும் காதல்... அழித்திட வேண்டும் நீயே!
காட்டாற்றில் நீச்சல் காதல்... கை தர வந்தேன் நானே!
ஓ... ஏற்காமல் போனாள் ஏனோ... சோகம் எதற்கடா?
ஆறாத காயம் தானோ... காலம் மருந்துடா.....
உலகின்... நடுவே... தனியானேன் நானே...
அவளால்... அழுதேன்... கடலானேன் நானே...

அது ஒரு காலம்... அழகிய காலம்,
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்....
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்

ஹேய்... ஜோடியாய் இருந்தாள்... ஒற்றையாய் விடத்தானா...
முத்துப்போல் சிரித்தாள்... மொத்தமாய் அழத்தானா தானா...
ஹேய்... துள்ளித்தான் திரியும்... பிள்ளையாய் இரு நீயும்...
துன்பம் தான் மறந்து... பட்டம் போல் பற எப்போதும்...

உனக்கென நான்....


படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் அன்டனி
பாடியவர்கள்: விஜய் அன்டனி, ரம்யா
வரிகள்: தாமரை

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
எதற்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்

புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடிப் பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாயென மாறி அணைப்பாய்
உனது காதலில்.... விழுந்தேன்!


அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிடத் துடிக்குதே
நானெனில் நீ
நீ எனில் நான்
பிணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
படைத்திட தவிக்குதே
மழை வெயில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே

அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதிக் கொடுப்பாய்
அணைப்பினில் மயங்கிக் கிடந்தால்
அசைந்திடக் கூட மறுப்பாய்
உனது காதலில்.... விழுந்தேன்!

மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை தாண்டிப் போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோஹோஹோ பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில்.... விழுந்தேன்!

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே...

Monday, July 27, 2009

உன் பேரை சொல்லும் போதே...


படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல், ஹரி சரண்
வரிகள்: நா. முத்துக்குமார்

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
(உன் பேரை..)

நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
உனை தொடரும் கனவுகளோடு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)