படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
நீதானே.... நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்
ஏ…..ஏ….ஏ…
(சில இரவுகள்...)
நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ... ஹேய்
என் விழியின் கருமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே... ஓ…..
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே…
உண்மைகள் சொல்வதும்
உணர்ச்சியை கொல்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே….
நீதானே... நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே... நீதானே என் இமைகளை நீவினாய்
நீ தேடத் தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் ஞாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே...........
நீதானே... நீதானே... நீதானே....
என் நரம்புக்குள்ளே...
நீதானே... நீதானே... நீதானே...
என் நரம்புக்குள்ளே....