படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள்: ஹரி சரண், பிரேம்ஜி அமரன்
வரிகள்: லலிதானந்த்
அது ஒரு காலம்... அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும்... மறந்திடு நீயும்
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்
ஹேய்... ஜோடியாய் இருந்தாள்... ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாள்... மொத்தமாய் அழத்தானா தானா
ஹேய்... துள்ளித் தான் திரியும்... பிள்ளையாய் இரு நீயும்
துன்பம் தான் மறந்து... பட்டம் போல் பற எப்போதும்
அது ஒரு காலம்... அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும்.... நீயும் நானும்.... நீயும் நானும்...
ஓ... இதயம் என்பது வீடு... ஒருத்தி வசிக்கும் கூடு,
அதிலே... அதிலே... தீ மூட்டிப் போனாள்,
உலகம் என்பது மேடை... தினமும் நடனம் ஆடு
புதிதாய்... ததும்பும்... நதி போல ஓடு
நெஞ்ஜோடு பாரம் தந்தாள்... தூரத்தில் துக்கிப்போடு!
கண்ணோடு ஈரம் தந்தாள்... இன்னொரு பெண்ணைத் தேடு!
ஓ... நான் போகப் பாதை எது... வானில் மிதக்கலாம்!
வலி போற வார்த்தை எது... எல்லாம் மறக்கலாம்!
எனக்கே... எனக்காய்... அவள் என்று வாழ்ந்தேன்
அவள் ஏன்... வெறுத்தாள்... அடியோடு சாய்ந்தேன்!
அது ஒரு காலம்... அழகிய காலம்,
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்....
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்.....
நீயும் நானும்.... நீயும் நானும்.... நீயும் நானும்...
ஓ... அவளைப் பிரிந்து நானும்... உருகும் மெழுகு ஆனேன்
அவளின்... நினைவால்... எரிந்தேனே நானே!
ஓ... பழகத் தெரியும் வாழ்வில்... விலகத் தெரிய வேண்டும்
முடிந்தால்... மனதில்... துயரில்லைத்தானே.....
கல்வெட்டாய் வாழும் காதல்... அழித்திட வேண்டும் நீயே!
காட்டாற்றில் நீச்சல் காதல்... கை தர வந்தேன் நானே!
ஓ... ஏற்காமல் போனாள் ஏனோ... சோகம் எதற்கடா?
ஆறாத காயம் தானோ... காலம் மருந்துடா.....
உலகின்... நடுவே... தனியானேன் நானே...
அவளால்... அழுதேன்... கடலானேன் நானே...
அது ஒரு காலம்... அழகிய காலம்,
அவளுடன் வாழ்ந்த... நினைவுகள் போதும் போதும்....
பழையது யாவும்... மறந்திடு நீயும்,
சிரித்திட தானே... பிறந்தது நீயும் நானும்
ஹேய்... ஜோடியாய் இருந்தாள்... ஒற்றையாய் விடத்தானா...
முத்துப்போல் சிரித்தாள்... மொத்தமாய் அழத்தானா தானா...
ஹேய்... துள்ளித்தான் திரியும்... பிள்ளையாய் இரு நீயும்...
துன்பம் தான் மறந்து... பட்டம் போல் பற எப்போதும்...