Wednesday, March 31, 2010

இதுவரை இல்லாத உணர்விது...


படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், ஆன்ரியா ஜெரெனியா
வரிகள்:

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில்
உண்டான கனவிது
பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை...)

மூடாமல்
மூடி மறைத்தது
தானாக
பூத்து வருகுது
தேடாமல்
தேடி கிடைத்தது
இங்கே...
(மூடாமல்...)


இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என்
உண்மை நிலை அறிய
தாங்காமலும்
தூங்காமலும்
நாள் செல்லுதே

இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம்
என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என்
பயணம்


அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன
எண்ணங்களை
யார் அறிவார்

என் நெஞ்சமோ
உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்


மனதிலே
உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே
முத்தான உணர்வுகள்
திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே...)


தேகம்
இப்போது உணர்ந்தது
தென்றல்
என் மீது படர்ந்தது
மோகம்
முன்னேறி வருகுது
முன்னே
(தேகம்...)

Thursday, March 18, 2010

ஏ துஷ்யந்தா...


படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுர்முகி, குமரன்
வரிகள்:

ஏ துஷ்யந்தா... ஏ துஷ்யந்தா...
உன் சகுந்தலா தேடி வந்தாள்
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தாள்

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்

மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை

(ஏ துஷ்யந்தா...)


அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்

இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்

வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்துக்கொண்டு படுத்தேன்

பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

(ஏ துஷ்யந்தா...)


மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்

கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்

பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு

சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய்

மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

(ஏ துஷ்யந்தா...)

Sunday, March 14, 2010

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...


படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்
அழியாது காதல்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னைக் காண்கிறேன்
ஆகாயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாதச் சுவடு

தீராத தேடல் இது
தித்திக்கும் தூறல் இது

(உனக்காகத்தானே...)


தேவதை போல வந்து காதல் இறங்கும்
அசரீரியாக நின்று பேசிச் சிரிக்கும்

புரியாது பெண்ணே
காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்
த ன னா ன னா த ன னா ன

வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்கோலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மானம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மானம் நிறைவேறும்

காதலின் ஆட்சிதானே நமக்கிங்கு வேண்டும்
பூமியைத் தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்

(உனக்காகத்தானே...)


காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

சலவைக்கல் சிலையே
பூஜிக்க வா
ரகசிய பூவாய்
தனனானனா

உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெட்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் சுவாசிக்க பிடிக்காது

பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...


படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரூப்குமார்
வரிகள்:

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே... ஓ...
இவளிடம்... உருகுதே...

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ...
என்றாலும் ஓ...
கேட்காதே ஓ...


என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்

என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிந்தும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ...
பொல்லாதது
புரிகின்றது ஓ...

(ஒரு தேவதை..)


கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே

மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ...

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே

(ஒரு தேவதை..)

Wednesday, March 3, 2010

என் காதல் சரியோ தவறோ...


படம்: குட்டி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கே கே
வரிகள்:

Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரம் வேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பன்னிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)

என் காதல் சொல்ல...


படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்வி
வரிகள்: நா முத்துக்குமார்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலை பாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி


காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்


ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே


யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

Tuesday, March 2, 2010

புது வெள்ளை மழை...


படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

(புது வெள்ளை மழை...)


பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

(புது வெள்ளை மழை...)


நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

(புது வெள்ளை மழை...)