Wednesday, March 31, 2010

இதுவரை இல்லாத உணர்விது...


படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், ஆன்ரியா ஜெரெனியா
வரிகள்:

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில்
உண்டான கனவிது
பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை...)

மூடாமல்
மூடி மறைத்தது
தானாக
பூத்து வருகுது
தேடாமல்
தேடி கிடைத்தது
இங்கே...
(மூடாமல்...)


இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என்
உண்மை நிலை அறிய
தாங்காமலும்
தூங்காமலும்
நாள் செல்லுதே

இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம்
என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என்
பயணம்


அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன
எண்ணங்களை
யார் அறிவார்

என் நெஞ்சமோ
உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்


மனதிலே
உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே
முத்தான உணர்வுகள்
திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே...)


தேகம்
இப்போது உணர்ந்தது
தென்றல்
என் மீது படர்ந்தது
மோகம்
முன்னேறி வருகுது
முன்னே
(தேகம்...)