படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி
நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்
அழியாது காதல்
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னைக் காண்கிறேன்
ஆகாயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாதச் சுவடு
தீராத தேடல் இது
தித்திக்கும் தூறல் இது
(உனக்காகத்தானே...)
தேவதை போல வந்து காதல் இறங்கும்
அசரீரியாக நின்று பேசிச் சிரிக்கும்
புரியாது பெண்ணே
காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்
த ன னா ன னா த ன னா ன
வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்கோலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மானம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மானம் நிறைவேறும்
காதலின் ஆட்சிதானே நமக்கிங்கு வேண்டும்
பூமியைத் தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே...)
காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்
சலவைக்கல் சிலையே
பூஜிக்க வா
ரகசிய பூவாய்
தனனானனா
உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெட்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் சுவாசிக்க பிடிக்காது
பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)
நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்