Sunday, November 29, 2009

என் நெஞ்சில் தூங்கவா...


படம்: என்னைத் தாலாட்ட வருவாளா
இசை:
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்:

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது
விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்த வா வாய்ப்புள்ள போது
அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது
தலைசாய்வதேது..


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
முகில் இன்னும் துயில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ ஓ..ஓ...ஓ


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே..
என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
ஓ வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா பள்ளி கொள்ள நீ வா

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

யாரும் இல்லாத தீவொன்று...


படம்: ஞானப்பழம்
இசை:
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்:

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
(யாரும்...)
(யாரும்...)

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்


என் விழியில் பிம்பம் - என்றும்
நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே
என்றும் என் காதில் வேண்டும்

உன்னுடைய பெயர் சொல்லி
என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும்
உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே

நொடி கூட நில்லாத
கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர...
(யாரும்...)


காவிரியில் வந்து - கங்கை
கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று
காதல் நீராட வேண்டும்

ஈழத்தில் போர் ஓய்ந்து
தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில்
தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே

வெடிகுண்டு பூச்செண்டு
என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து
சுகமாக துயில் மேகம்...
(யாரும்...)

Friday, November 27, 2009

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்...


படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், மகாநதி ஷோபனா
வரிகள்:

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
(கண்ணோடு கண்ணோடு...)


அன்பே அன்பே உன் ஆடை கொடு
உந்திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மலரட்டுமே

உன்கால் கொலுசு சங்கீதம் பாடாதா
உன் கண்மணியில் என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்கவில்லையா
(கண்ணோடு கண்ணோடு...)


நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிட
என் நிழலுக்குள் கரைந்து விடு
பூக்கள் கொஞ்சும் என் கூந்தலுக்குள்
புது குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம்தான் இன்னாளில் ஆதாயம்
உன் நெஞ்சில் தான் முடியும் என் ஆகாயம்
பொய்கள் மறைந்தால் கடலலைகள் காதல் சொல்லட்டும்
(கண்ணோடு கண்ணோடு...)

Friday, November 20, 2009

என்னோடு காதல் என்று...


படம்: பஞ்ச தந்திரம்
இசை: தேவா
பாடியவர்கள்: மனோ, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா


என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்கவைத்து
ஐயு விடுடா என்றாய் நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசு கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய் சீ சீ சீ சீ

கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா
சரி வளைக்க முயன்றது யாரு யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு யாரு
நீயா நானா

நான் வந்து நீயோடு ஒன்றானது
நாம் என்ற சொல் ஒன்று உண்டானது - ஆண்டவா

என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா


நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய் நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுக்குள்ளே நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இழுத்து நின்றாய் சீ சீ சீ சீ

லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடிக் கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு; யாரு யாரு
நீயா நானா
ஒத்துழைத்தது யாரு; யாரு நீயா நானா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது

(என்னோடு காதல்...)
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா

Tuesday, November 17, 2009

சின்னஞ் சிறு வயதில்...


படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், SP ஷைலஜா
வரிகள்: கண்ணதாசன்

சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி

சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி


மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ம்... ம்... ம்...
ஆ... ஆ... ஆ... ஆ...
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

(சின்னஞ் சிறு வயதில்...)


வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் - செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே - செல்லம்மா ......
ம்... ம்... ம்... ம்...

(சின்னஞ் சிறு வயதில்...)

Saturday, November 14, 2009

நான் பாடும் பாடல் நீயல்லவா...


படம்:
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா


இழந்தென்றல் காற்று தாலாட்டும் நேரம்
எனை மீறி நெஞ்சம் உனை நாடுதே
வெண்மேகத்தேரில் விளையாட எண்ணி
ஏதேதோ ஆசை உண்டாகுதே
நீ எங்கு சென்றாலும் என் உள்ளமே
நீ போகும் வழி மீது பூத்தூவுமே


நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நதியாக நானும் பிறந்தாலும் போதும்
உன் பேரைச்சொல்லி நடை போடுவேன்
மண்ணாக நானும் மறு ஜென்மம் கொண்டால்
உன் பாதம் தாங்கும் நிலமாகுவேன்
என்னாளும் தேயாத சந்ரோதயம்
என் நெஞ்சில் ஒளி வீசும் தேவாலயம்

நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா
நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா