Friday, November 27, 2009

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்...


படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், மகாநதி ஷோபனா
வரிகள்:

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
(கண்ணோடு கண்ணோடு...)


அன்பே அன்பே உன் ஆடை கொடு
உந்திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மலரட்டுமே

உன்கால் கொலுசு சங்கீதம் பாடாதா
உன் கண்மணியில் என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்கவில்லையா
(கண்ணோடு கண்ணோடு...)


நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிட
என் நிழலுக்குள் கரைந்து விடு
பூக்கள் கொஞ்சும் என் கூந்தலுக்குள்
புது குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம்தான் இன்னாளில் ஆதாயம்
உன் நெஞ்சில் தான் முடியும் என் ஆகாயம்
பொய்கள் மறைந்தால் கடலலைகள் காதல் சொல்லட்டும்
(கண்ணோடு கண்ணோடு...)