படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், SP ஷைலஜா
வரிகள்: கண்ணதாசன்
சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி
சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ம்... ம்... ம்...
ஆ... ஆ... ஆ... ஆ...
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
(சின்னஞ் சிறு வயதில்...)
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் - செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே - செல்லம்மா ......
ம்... ம்... ம்... ம்...
(சின்னஞ் சிறு வயதில்...)