Sunday, November 29, 2009

யாரும் இல்லாத தீவொன்று...


படம்: ஞானப்பழம்
இசை:
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்:

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
(யாரும்...)
(யாரும்...)

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்


என் விழியில் பிம்பம் - என்றும்
நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே
என்றும் என் காதில் வேண்டும்

உன்னுடைய பெயர் சொல்லி
என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும்
உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே

நொடி கூட நில்லாத
கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர...
(யாரும்...)


காவிரியில் வந்து - கங்கை
கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று
காதல் நீராட வேண்டும்

ஈழத்தில் போர் ஓய்ந்து
தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில்
தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே

வெடிகுண்டு பூச்செண்டு
என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து
சுகமாக துயில் மேகம்...
(யாரும்...)