Wednesday, December 30, 2009

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி...


படம்: ஹேராம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்
வரிகள்:

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேறெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

Monday, December 28, 2009

வாசமில்லா மலரிது...


படம்:
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது
மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம்
எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல்
தலை வைத்து ஓடும்
(வாசமில்லா மலரிது...)


பாட்டுக்கொரு ராகம்
ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை
நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே
(வாசமில்லா மலரிது...)


என்ன சுகம் கண்டாய்
இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை
ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே
(வாசமில்லா மலரிது...)


மாதங்களை எண்ண
பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை
மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட
(வாசமில்லா மலரிது...)
(வாசமில்லா மலரிது...)

Sunday, December 27, 2009

காதல் ரோஜாவே...


படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ
ஏதானதோ
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)


தென்றல் என்னைத் தீண்டினால்
சேலைத் தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடைப் பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் இரண்டும் சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தை இல்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)


வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்துப் போ
பாவை இல்லை பாவை
தேவை என்னத் தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)

Saturday, December 26, 2009

கண்ணீரே கண்ணீரே...


படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே...
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே
கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே
(கண்ணீரே கண்ணீரே...)


உன் பார்வை பொய்தானா
பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா
சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...
(தேடித் தேடித் தேய்ந்தேனே...)


பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ
சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில்
ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்

உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே
(கண்ணீரே கண்ணீரே...)

காதல் வந்தால்...


படம்: இயற்கை
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன்

என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய
கரையில் கரைந்து
கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும்
கூடுதடி...
(காதல் வந்தால்...)


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு

உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி
(காதல் வந்தால்...)


பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி

சக்கரை நிலவே...


படம்: யூத்
இசை:
பாடியவர்கள்: ஹாரிஷ் ராகவேந்திரா
வரிகள்: வைரமுத்து

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையேல்
(சக்கரை நிலவே...)

மனம் பச்சைத் தண்ணிதான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
(சக்கரை நிலவே...)


காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல
உணரத்தானே முடியும்
அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல அதில் வார்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா

ஆண் கண்ணீர் பருகும்
பெண்ணின் இதயம்
சதை அல்ல
கல்லின் சுவரா
(கவிதை பாடின...)


நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்த சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி எனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன்
பிடிக்காதென்றாய்
(கவிதை பாடின...)

Friday, December 25, 2009

எங்கே எனது கவிதை...


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
(எங்கே எனது கவிதை...)


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயிலில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மனம் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

(எங்கே எனது கவிதை...)


ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

(எங்கே எனது கவிதை...)

கண்ணாமூச்சி ஏனடா...


படம்:
இசை: ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை

இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ...)


என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா

நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா
என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா
என் கண்ணா
உன் இமை கொண்டு
விழி மூட வா
உன் உடல்தான்
என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ...)


வான் மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
வான் மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
கண் மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு

என் உள் மூச்சிலே
உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ...)

என்னை காணவில்லையே...


படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்
வரிகள்: வைரமுத்து

அன்பே... அன்பே.... அன்பே.. அன்பே....

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்வா
வந்தால் வாழ்வேனே நான்
(என்னை காணவில்லையே...)


ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே...)


நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
(என்னை காணவில்லையே...)

காதல் வளர்த்தேன்....


படம்: மன்மதன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: KK
வரிகள்: நா முத்துகுமார்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் - என்
உசிருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்

ஏ… இதயத்தின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒண்ணு தான் வெச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள புள்ள...
(காதல் வளர்த்தேன்...)


பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்ண்கள்தான்
பூமியிலே வாழலாம் - ஒரு
பார்வையால் மனதை
பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் - அது
மழையில் அழியாமல் குடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
(ஏ புள்ள புள்ள…)
(காதல் வளர்த்தேன்…)


உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை…
அடியே ஏ புள்ள புள்ள…
(காதல் வளர்த்தேன்…)

Wednesday, December 23, 2009

மனமே மனமே தடுமாறும் மனமே...


படம்: ரோஜாவனம்
இசை:
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்:

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது
நீ சிறகை விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போகத்
தூக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஒளிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண்மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம்போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர்வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் தந்த நினைவுகளை
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலைமூட மூடிகள் உண்டு
அலைகடல் மூடிடமூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களுமுண்டு
காதலின் கையில் கத்தியுமுண்டு
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதில் என்ன வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...


படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

என் காதலே என் காதலே...


படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
(என் காதலே...)


காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீழ்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா
(என் காதலே...)


காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக் கொண்டால்
நான் குலுங்கிக் குலுங்கு அழுதேன்

இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
(என் காதலே...)

Wednesday, December 2, 2009

விழியே விழியே பேசும் விழியே...


படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே

மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்


உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையாய் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி

இலைத் துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையே பொழிகிறது

போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
ஓடிப் போ நீ போ என் உலகம் உருகிறது

(விழியே..)

Tuesday, December 1, 2009

அன்புள்ள மான் விழியே...


படம்: குழந்தையும் தெய்வமும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன் !


நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள மான் விழியே...)


நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா

(அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே...)
(அன்புள்ள மான் விழியே...)

அன்புள்ள மான் விழியே...(R)


படம்: ஜக்குபாய்
இசை: ர(f)பி
பாடியவர்கள்: ர(f)பி, மகேஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன் !


நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள மான் விழியே...)


நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா

(அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே...)
(அன்புள்ள மான் விழியே...)