Saturday, December 26, 2009

காதல் வந்தால்...


படம்: இயற்கை
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன்

என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய
கரையில் கரைந்து
கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும்
கூடுதடி...
(காதல் வந்தால்...)


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு

உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி
(காதல் வந்தால்...)


பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி