Wednesday, December 23, 2009

மனமே மனமே தடுமாறும் மனமே...


படம்: ரோஜாவனம்
இசை:
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்:

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது
நீ சிறகை விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போகத்
தூக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஒளிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண்மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம்போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர்வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் தந்த நினைவுகளை
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலைமூட மூடிகள் உண்டு
அலைகடல் மூடிடமூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களுமுண்டு
காதலின் கையில் கத்தியுமுண்டு
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதில் என்ன வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)