Monday, August 31, 2009

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சாதானா சர்கம்
வரிகள்: வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமா
தண்ணீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு


பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விலங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ

தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வால் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ

உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்மேல் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன் - என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்

நெஞ்சே நெஞ்சே...
நெஞ்சே நெஞ்சே...
நெஞ்சே நெஞ்சே...


அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றினைக் கை விடுமே

விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்து பின்னே
முத்துக்கள் கை வருமே

காதல் ராஜா ஒன்றைக் கொடுத்தால்
என்னொன்றில் உயிர் வருமே
உன்னைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே

அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்

நெஞ்சே நெஞ்சே...
நெஞ்சே நெஞ்சே...
நெஞ்சே நெஞ்சே...

நெஞ்சே நெஞ்சே நீ...


படம்: அயன்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, மஹதி
வரிகள்: வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய் - வான்
ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்.
(நெஞ்சே நெஞ்சே...)


க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சுப் ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்
(நெஞ்சே நெஞ்சே...)


க‌ள்வா ஏ க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே
காத‌ல் மெய்க் காத‌ல் அது ப‌ட்டுப் போகாதே
காற்று நாம் பூமிதனை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறிப் போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறிப் போக‌க் கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே
(நெஞ்சே நெஞ்சே...)
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே ஏன் வைகிறாய்

தங்கத் தாமரை மகளே...


படம்: மின்சார கனவு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SPB பாலசுப்பிரமணியம்
வரிகள்: வைரமுத்து

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் - சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் கண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை...)
(தங்கத் தாமரை...)


செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்துவரையில் ஆசை வந்து உண்டேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தினுள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நானென்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
(தங்கத் தாமரை...)


பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்
நகங்கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை...)

வெண்ணிலவே வெண்ணிலவே...


படம்: மின்சார கனவு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே...) (2)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே...)


இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் (2)
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே... கண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப் போன பின்னே
புல்லோடு பூ விழும் ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)


எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே... பெண்ணே...
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)

Friday, August 28, 2009

காதல் நீதானா....


படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனிபாரதி

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்...

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதைத் தருகிறேன்
உயிர் என சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்...
(காதல் நீதானா...)


எந்த குரல் கேட்டால்
என்ன தோன்றுது
உனக்கென்ன தோன்றுது
நேரில் பார்க்கச் சொல்லி
என்னை தூண்டுது
அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா...)


என்ன கனவு கண்டாய்
நீ வந்தாய்... முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய்
போ போ போ... சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறும்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்க்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா...)

அடடா அடடா அடடா...


படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: சித்தர்த் நாராயண்
வரிகள்:

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரைக் கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே...
(அடடா அடடா...)


நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி

என் வீட்டுப் பூவெல்லாம்
உன் வீட்டுத் திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
(அடடா அடடா...)


ஏய் வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஞாபகச் சின்னங்கள்
(அடடா அடடா...)

கண்ணனுக்கு என்ன வேண்டும்...


படம்: தனம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி
வரிகள்: விசாலி கண்ணதாசன்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி (2)
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும் (2)
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
நாத வேதங்கள் கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு...)

நீயில்லை நிலவில்லை...


படம்: பூச்சூடவா
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்:


நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை (2)
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
(நீயில்லை நிலவில்லை...)


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனைத்தேடி உன்னில் தான் சந்தித்தேன்.
காதலே…. காதலே…. ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்…
(நீயில்லை நிலவில்லை...)


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடுமுன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்…
(நீயில்லை நிலவில்லை...)

Wednesday, August 26, 2009

பூங்காற்றிலே உன்...


படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து


கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை (3)

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே...)


காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா…
(பூங்காற்றிலே...)


கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை (2)


வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே...)

Friday, August 21, 2009

இரு பறவைகள்...


படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜென்சி
வரிகள்: கண்ணதாசன்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
(இரு பறவைகள்...)


சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புதுவெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மான் ஓட கலை மான் ஆட
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
(இரு பறவைகள்...)


பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர் போல
நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல
அவர் காண்கிறார்
நீ என்றும் நான் என்றும்
அழிக்கவும் பிரிக்ககவும் முடியாதம்மா
(இரு பறவைகள்...)

Thursday, August 20, 2009

யாரோ யாருக்குள்...


படம்: சென்னை 600028
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம், சித்ரா
வரிகள்: வாலி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
(யாரோ...)

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள்தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன் கண்மணி
(யாரோ...)


ஊரை வெல்லும் தோகை நானும்
உன்னால் இன்று தோற்றுப் போனேன்
கண்ணால் யுத்தமே - நீ
செய்தாய் நித்தமே

ஓ.. நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன் - நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா.... ஹே!
(யாரோ...)


உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் - நான்
தவம் பண்ணினேன் ஆ ஹா ஹா..

கெட்டக் கெட்ட வார்த்தை சொல்லி
கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு - இல்லை
ஏதோ ஆய்விடும்

காதல் கொண்டு பேசும் போதும்
சென்னைத் தமிழும் செந்தேன்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா... ஹா...
(யாரோ...)

கவிதைகள் சொல்லவா...


படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: பா விஜய்

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா - உன்
கால்த் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
யார் அந்த ரோஜாப்பூ
என் கனவில் மெதுவாக
பூ வீசிப் போனாள் அவள் யாரோ...

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னைக் கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே... (2)
(கவிதைகள்...)


புல்வெளி மீது நடக்காதே
பெயர்ப் பலகைகள் இருக்கு பூங்காவில்
அதை தான் படித்திட காற்றுக்கு
ஓ தெரியாதே தெரியாதே
பூக்களை பூக்களை தீண்டாதே
மலர்க் காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதை தான் வண்டுகள் எப்பவும்தான்
கேட்காதே கேட்காதே
எல்லைக் கோடுகள் தண்டாதே,
உலக தேசங்கள் சொல்லும்
பறவைக் கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும் நம்மை போல்
(கவிதைகள் சொல்லவா…)


காற்றென காற்றென நான் மாறி
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி
ரகசியமாய் நான் சுவாசிக்கவா - ஓ
சுவாசிக்கவா சுவாசிக்கவா
மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி
வானத்தின் இரவுக்கு கொடுத்திடவா - ஓ
கொடுத்திடவா கொடுத்திடவா
கடலின் அலையாக நான் மாறி
உனது பெயர் சொல்லி வரவா
உந்தன் கைக் குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவா
(கவிதைகள் சொல்லவா…)

ஏதோ ஒரு பாட்டு...


படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: கலைக்குமார்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
(ஏதோ ஒரு பாட்டு...)


கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
(ஏதோ ஒரு பாட்டு...)


தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
(ஏதோ ஒரு பாட்டு...)

எனக்கொரு சினேகிதி...


படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்
வரிகள்: வாலி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்கத் தோன்றினால் பூக்களைப் பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லிப் பார்க்கிறேன்
(எனக்கொரு...)


மேகமது சேராது வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப் போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
(எனக்கொரு...)


கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
உன்னைத் தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
(எனக்கொரு...)

Tuesday, August 18, 2009

ஆழியிலே முக்குளிக்கும்...


படம்: தாம் தூம்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிசரண்
வரிகள்: நா முத்துக்குமார்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும்
காற்றாக உரு மாறி
முந்தானை படி ஏறவா
மூச்சோடு குடி ஏறவா
உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சுடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைக்கோர் இலை வைக்கவா

உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா


அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே

அழகே அழகே வியக்கும் அழகே
அழகே அழகே வியக்கும் அழகே

எனதுயிரே எனதுயிரே...


படம்: பீமா
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சின்மயீ, சாதனா சர்கம்
வரிகள்:

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
(எனதுயிரே...)


இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளறலும் எனக்கு இசை
உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்.
கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய்
நல்ல ஓவியம்
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்
(எனதுயிரே...)


மரமிருந்தால் அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ என்றே நான்
இருதயம் துடித்திடுவேன்
இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
கலங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே
(எனதுயிரே...)

முதல் மழை என்னை...


படம்: பீமா
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: R பிரசன்னா, ஹரிஹரன், மகதி
வரிகள்: நா முத்துக்குமார்

முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே...
இதயமும் … ஹோய்
இதமாய் மிதந்ததே….
(முதல் மழை...)


கனவோடுதானடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

எதுவும் புரியா புதுக்கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன் - மழைக்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
(முதல் மழை...)


ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்
என்வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓ…ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளில் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிருன்னுள்ளே உந்தன் நெருக்கம்
இருந்தாலுமே என்றும் இருக்கும் - நான்
இருந்தாலுமே என்றும் இருக்கும்.

பெயரே தெரியாத பறவை அழைத்ததே…

இதயமும்…ஹோய்….இதமாய் மிதந்ததே…

Monday, August 17, 2009

உன் பார்வையில் ஓராயிரம்...


படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா
வரிகள்:

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
(உன் பார்வையில்...)


அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்(2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(உன் பார்வையில்...)


அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்(2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
(உன் பார்வையில்...)

காதல் வைத்து...


படம்: தீபாவளி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: நா முத்துகுமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்
(காதல் வைத்து...)
(அசைந்தாய்...)


தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்
(காதல் வைத்து...)
(அசைந்தாய்...)

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடி
உன்னிடத்தில் நான் போசியதெல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
(காதல் வைத்து...)
(சிரித்தாய்...)
(அசைந்தாய்...)

வான் நிலா நிலா அல்ல...


படம்: பட்டினப் பிரவேசம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல...)


தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல...)


வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான் நிலா நிலா அல்ல...)

நறுமுகையே நறுமுகையே...


படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?


மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை


யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா

உன்னைப் பார்த்த பின்பு....


படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
(உன்னை...)


ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...)


நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...)

Sunday, August 16, 2009

சங்கீத ஸ்வரங்கள்....


படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சந்தியா
வரிகள்: புலமைப்பித்தன்

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்


நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத ஸ்வரங்கள்...)


எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்!
(சங்கீத ஸ்வரங்கள்...)

தாஜ்மஹால் தேவையில்லை...


படம்: அமராவதி
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள்: வைரமுத்து

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
(தாஜ்மஹால்...)


பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ
பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே
(தாஜ்மஹால்...)


சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்பப் பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்...)

முதல் முதலில் பார்த்தேன்....


படம்: ஆஹா
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: வாசன்

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை (2)
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
(முதல் முதலில்...)


நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் (2)
முதற்பார்வை நெஞ்சில் என்றும் - உயிர் வாழுமே
உயிர் வாழுமே!
(முதல் முதலில்...)


உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் (2)
என் சுவாசக் காற்றில் எல்லாம் - உன் ஞாபகம்
உன் ஞாபகம்!
(முதல் முதலில்...)

ஏதோ ஏதோ ஒன்று....


படம்: எனக்கு 20 உனக்கு 18
இசை: AR ரகுமான்
பாடியவர்கள்: கார்த்திக், கோபிகா பூர்ணிமா
வரிகள்: பா விஜய்

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே
உயிரே... இதயம்....
உனக்கே... உனக்கே...


உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே
மௌனம் கொள்வது கஷ்டம் - நாம்
பேசிகொள்ளத நிமிஷம் எல்லாமே நஷ்டம்
சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும்
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது
மௌனம் மிஞ்சினால் பேசிவிடுவதே நல்லது
சூரியனைப் போலே என் முன்பு வந்தாய்
பனித்துளி போலே பணிந்து விட்டேன்
உயிரே... இதயம்....
உனக்கே... உனக்கே...
கனவாய் இருந்தால் எதிரே இருப்போம்
நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம் (2)
(ஏதோ ஏதோ ஒன்று...)


உள்ளே போகிற சுவாசம் என்பது
வெளியில் வருவது ஞாயம் ஞாயம்
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்
கண்கள் காண்கிற கனவு என்பது
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்
போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்
உயிரே... இதயம்....
உனக்கே... உனக்கே...
(ஏதோ ஏதோ ஒன்று...)

அன்னக்கிளி நீ வாடி....


படம்: 4 Students
இசை: Jassie Gift
பாடியவர்கள்: பிரசன்னா/Jassie Gift
வரிகள்: சுவேதா

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ளே தேட

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க


விழியில் விழியில் தங்க ஜரிகை களை பின்னும்
அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்
சரியும் உடையில் ஒரு நிமிஷம்
மல்லிகைச் சரமே பக்கம் கொஞ்சம் வாடி
மூச்சாலே உன்னை நான் முழம் போட
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்


குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களாய் இருந்து
சிணுங்க வேணும் ஒரு நிமிஷம்
வளையம் நெளியும் குட்டி குறும்புகளை பண்ணும்
இடையில் வேணும் ஒரு நிமிஷம்
முத்தாடும் கடலே விட்டுத் தர வேணும்
மீனாகி உன்னை நான் அள்ளிக் குடிக்க
அழகே நீ உன்னை தரணும் ஒரு நிமிஷம்
(அன்னக்கிளி நீ வாடி...)

ஏன் பெண்ணென்று....


படம்: Love Today
இசை: சிவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
ஏன் வலி தீர ஒரு வலி என்ன
என் பனிப்பூவே என்னைப் பார்த்தால் என்ன
(ஏன் பெண்ணென்று...)


நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்
தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு
(ஏன் பெண்ணென்று...)


நோகாமல் பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும் என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு
(ஏன் பெண்ணென்று...)

ஏன் பெண்ணென்று.... (sad)


படம்: Love Today
இசை: சிவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்?
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னைப் பார்த்தால் போதும்
(ஏன்....)


நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும் - நீ
தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை முகம் பார்க்க துடிக்கிது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா
இதுதான் காதல் சரித்திரமா
(ஏன்....)

Friday, August 14, 2009

என்ன அழகு எத்தனை....


படம்: Love Today
இசை: சிவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறுநெஞ்சைக் கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே - எந்தன்
உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசைத் தைத்தாள்
சுட்டும் விழிப் பார்வையில் சுகம் வைத்தாள் - நான்
காதலின் கடலில் விழுந்து விட்டேன் - நீ
கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
(என்ன அழகு...)


அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே - என்
உயிர்போக யோசித்தேன்
நான்காண்டுத் தூக்கம் கெட்டு
இன்றுன்னைச் சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் - அடி
தீக்கூடத் தித்தித்தேன்
மாணிக்கத் தேரே உன்னை
மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது
நிஜம்தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே
(என்ன அழகு...)

நான் கொண்ட ஆசையெல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் - அடி
உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம்தான்
வலியின் கொடுமை முடிய - அடி
தமிழ்வார்த்தை கொஞ்சம்தான்
இன்றேதான் பெண்ணே உன்
முழுப்பார்வை நான் கண்டேன்
கைதொட்ட நேரம் என்
முதல் மூச்சம் நான் கொண்டேன்
மகராணியே மலர்வாணியே இனி
என் ஆவி உன் ஆவியே
(என்ன அழகு...)

உருகுதே மருகுதே....


படம்: வெய்யில்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: நா முத்துக்குமார்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ.. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ... அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
ஓ... சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ... மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்... ஓ....

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...
ஓ................. உருகுதே

Wednesday, August 12, 2009

காதல் பெரியதா...


படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுதா ரகுநாதன்
வரிகள்: நா முத்துகுமார்

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)

காதல் பெரியதா... காமம் பெரியதா... (2)
தேக சாலையில் நடந்து போகையில்
காமம் பெரியது ஹே ஹே
வேகம் என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே

அட காமம் இல்லா காதல் - அது
கதவே இல்லா வீடு
அட காதல் இல்லா காமம் - அது
வீடே இல்லை காடு

ஏ! காமம் என்பது உடலில் வந்ததும்
மிருகம் எட்டிப் பார்க்கும்
ஏ! காதல் என்பது உயிரில் கலந்ததும்
உன்னைப் புனிதமாக்குக்

உடல் காமம் இறந்து போகும்
உயிர்க் காதல் என்றும் வாழும்


காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே
கூச்சம் நம்மை தீண்டவில்லையே
மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்
ஏ! ஆடை உடலைத் தொட்ட போதிலே
அச்சம் நம்மை விட்டுப் போனதே
வா வா மீண்டும் மழலையாகிப் பார்ப்போம்

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா - ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)

கனவு கண்டு வாழ்ந்தால்
அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை
கடலில் பெய்யும் மழையால் - அட
லாபம் ஒன்றும் இல்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)

காதல் பெரியதா... காமம் பெரியதா... (2)

கடையை திறக்கும் போதே - நீ
காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே
நீ - அள்ளிக்கொண்டு ஓடு (5)


அண்டம் முழுதும் ஆசை தானடா
பிண்டம் முழுதும் போதை தானடா
உன்னை என்னை வெற்றிகொள்ள வாடா
கண்டம் உனக்கு பெண்ணில் தானடா
கண்டம் எனக்கு ஆணில் தானடா
தப்பிப் போக தப்பு செய்ய வாடா

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா - ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)

கனவு கண்ட போது - நம்
கண்கள் திறக்க வில்லை
கண்ணைத் திறந்த போது - அந்த
கனவு அங்கு இல்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)

கடையை திறக்கும் போதே - நீ
காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே
நீ - அள்ளிக்கொண்டு ஓடு (5)

(காதல் பெரியதா)

Saturday, August 8, 2009

நினைத்து நினைத்து (F)


படம்: 7G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
வரிகள்: நா முத்துகுமார்

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு


பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழியும் என்னை மறக்குமா...

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்

Friday, August 7, 2009

முதல் முறை உன்னை...


படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி
பாடியவர்கள்: ஹரிணி, திப்பு, ஹரிச்சரன்
வரிகள்: லலிதானந்த்

முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்தில் உன் முகம் தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே

நீ விளையாட்டுப் பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல தாங்க வேண்டும்
மடியினிலே
(முதல் முறை...)


நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால்
வானவில் வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால்
வாழ்விலே என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே
(முதல் முறை....)


நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள்கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே

சூரியன் உதிப்பதே
உன் முகம் காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத்தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை....)

Thursday, August 6, 2009

அன்பே என் அன்பே...


படம்: தாம் தூம்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, V பிரசன்னா
வரிகள்: நா முத்துகுமார்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

ஒரு வெட்கம் வருதே வருதே...


படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே…..
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..
இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே….
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
பட பட படவெனவே….
துடித்துடித்திடும் மனமே…
வர வர வரக் கரைத்தாண்டிடுமே


மேலும் சில முறை
உன் குறும்பிலே…. நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால்…..உறங்குவேன்

ஆணின் மனதிற்குள்ளும்….
பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே
நெஞ்சம் துடிக்கிறதே

ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே….

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே…


காற்றில் கலந்து நீ
என் முகத்தினை
எங்கோ மோதினாய்….
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்……

ஓ….
தூது அனுப்பிடவே …
நேரம் எனக்கில்லையே…
நினைத்த பொழுதினிலே…
மரணம் எதிரினிலே….

வெயிலிலே ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே
நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே…..

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..

ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
துடி துடித்திரு மனமே
வர வர வரக் கரைத்தாண்டிடுமே…

மனம் விரும்புதே உன்னை...


படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரினி
வரிகள்: வைரமுத்து


மனம் விரும்புதே... உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
ஐயையோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
(மனம்.....)


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...
(நினைத்தாலே.....)


மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!
(நினைத்தாலே.....)

விழியில் விழுந்து...


படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S சசிரேகா
வரிகள்: வைரமுத்து

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு
(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்
அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல
அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்
தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் கொதிக்கும் சத்தம்

முன் பனியா... முதல் மழையா...


படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மால்குடி சுபா
வரிகள்: பழனி பாரதி

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே! உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே
(முன் பனியா)

மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே....


என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே
(முன் பனியா)

சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு
ஏலோ ஏலோ! ஏலே ஏலோ...


என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...
(முன் பனியா)

மயங்கினேன் சொல்லத்...


படம்: நானே ராஜா நானே மந்திரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா
வரிகள்:

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?
(மயங்கினேன்)


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக் காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
(மயங்கினேன்)


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
(மயங்கினேன்)

கண்டேன் கண்டேன்...


படம்: பிரிவோம் சந்திப்போம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வேதா
வரிகள்: யுகபாரதி

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே... எதிரே...

பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை


மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை... பேசுதே...

போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே... கூசுதே...

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பேசாது போனாலும் நீ என் சங்கதி

கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை


காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி
தூங்காமல் கைசேர காதல் தங்குமே

ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே... எதிரே...

பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா...


படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சாதனா சர்கம்
வரிகள்: நா.முத்துக்குமார்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன்... அன்பே... ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன்... தினம்... உன் தலைகோதி
காதோரத்தில்... எப்போதுமே... உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான்... கைகோர்த்து நான்...
உன் மார்புச் சூட்டில்... முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)


நீயும் நானும் சேரும்முன்னே
நிழல்... ரெண்டும்... ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நிஜம்... இன்று... விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக்கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக்கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)

உனக்குள் நானே....


படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: மதுஸ்ரீ
வரிகள்: ரோகினி

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா...உன் வானவில்லா...
பொன் மான் இவளா...உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா


ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)


தீ போல் தேன் போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை வெட்டிச் சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)

கரு கரு விழிகளால்...


படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ... ஒரு மல்லிச் சரமே
நீ... இலை சிந்தும் மரமே
என்... புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்... நீ தங்கச்சிலையா
வெண்... நுரை பொங்கும் மழையா
மண்... மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ... ஒரு மல்லிச் சரமே
மண்ணில்... இலை சிந்தும் மரமே
மின்னும்... புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்... நீ தங்கச்சிலையா
வெள்ளை... நுரை பொங்கும் மழையா
அன்பால்... மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்


ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே இன்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

ஒரு மல்லிச்சரமே...

நெஞ்சுக்குள் பெய்திடும்...


படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
வரிகள்: தாமரை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் இல்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

(நெஞ்சுக்குள் பெய்திடும்...)


தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

(நெஞ்சுக்குள் பெய்திடும்...)

Wednesday, August 5, 2009

முன்தினம் பார்த்தேனே...


படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரஷாந்தினி
வரிகள்: தாமரை

Hi மாலினி... I'm கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகணும்...
நீ அவ்வளவு அழகு, இங்க எவனும் இந்த அழக ஒரு...
இவ்வளவு அழகாக பார்த்திருக்க மாட்டாங்க...
and I'm in love with you!

முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ... நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா... ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்போது என்னோடு வந்தால் என்ன... ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

(முன்தினம் பார்த்தேனே...)


துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோற்க்காதூ தா... பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ.... ஆருயிரே
ஓ... நிழல் போல விடாமல் உன்னை... தொடர்வேனடி...
புகைப்போல படாமல் பட்டு... நகர்வேனடி....
வினா நூறு கனாவும் நூறு... விடை சொல்லடி

(முன்தினம் பார்த்தேனே...)


கடல் நீலம் மங்கும் நேரம்... அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்... விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்.... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே....
உயிர் இரண்டும் உறையக்கண்டேன்... நெருங்காமலே...
உனையின்றி எனக்கு ஏது... எதிர்காலமே....

(முன்தினம் பார்த்தேனே...)
வெண்ணிலா.... வெண்ணிலா....

உன்னோடு நான் இருந்த...


படம்: இருவர்
இசை: AR ரகுமான்
பாடியவர்கள்: அரவிந்த சாமி, டொமினிக்
வரிகள்: வைரமுத்து

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை!
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை!
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை!

அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்!
ஆடை களைந்தேன் வெட்கத்த நீ அணிந்தாய்!

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

விழி மூடி யோசித்தால்....


படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா. முத்துகுமார்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்... புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே


ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

திகட்ட திகட்டவே....


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: தீபா மரியம்
வரிகள்: நா. முத்துகுமார்

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே
(திகட்ட திகட்டவே...)


யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போது நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடினால்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கையில் வந்ததே
என்னன்பே...

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே


காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடர்வேனே
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதுமாகி என்னுள் வந்து என்னை ஆள்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன்
என்னன்பே...

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே

Sunday, August 2, 2009

அழகாய் பூக்குதே...


படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அன்டனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்
வரிகள்: கலைக்குமார்

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே... ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே... ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே... ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே... ஒ ஹோ ஹோ ..

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே ....

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..


ஒருமுறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே... ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே... ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே... ஒ ஹோ ஹோ ..
அரை கணம் பிரிவில் நரை விழச் செய்தாயே... ஒ ஹோ ஹோ ..

நீ இல்லா நொடி முதல்
உயிர் இல்லா ஜடத்தைப் போல்
ஆவேனே....

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...

அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

தோழியா என் காதலியா...


படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் அன்டனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஸ்ரீ சரண், மேகா
வரிகள்: PV பிரசாத்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(நீ தோழியா..)


ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்

விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்

கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னை பறக்க விட்டாய்

அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல் கசங்கி விட்டேன்

தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாயை அவன் உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

கண்கள் இரண்டால்...


படம்: சுப்பிரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெலி ராஜ், தீபா மரியம்
வரிகள்: தாமரை

கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்... அருகில்... வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்... நினைத்தே… நகர்வேன்.. ஏமாற்றி...
கண்கள் எழுதும்... இரு கண்கள் எழுதும்...
ஒரு வண்ண கவிதை... காதல் தானா...
ஒரு வார்த்தை இல்லையே... இதில் ஓசையில்லையே...
இதை இருளிலும் படித்திட முடிகிறதே...

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும்... சொல்லாத கதை

கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


திரைகள் அண்டாத... காற்றும் தீண்டாத
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத... உருவம் கொள்ளாத...
கடவுளை போல்வந்து... கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே... உன்னோடு வர

கண்கள் எழுதும்... இரு கண்கள் எழுதும்...
ஒரு வண்ண கவிதை... காதல் தானா...
ஒரு வார்த்தை இல்லையே... இதில் ஓசையில்லையே...
இதை இருளிலும் படித்திட முடிகிறதே...

பேச எண்ணி சில நாள்... அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதுமென நான்...
நினைத்தே... நகர்வேன்... ஏமாற்றி...

கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
எனை கட்டி இழுதாய்... இழுதாய்... போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...