Sunday, August 16, 2009

அன்னக்கிளி நீ வாடி....


படம்: 4 Students
இசை: Jassie Gift
பாடியவர்கள்: பிரசன்னா/Jassie Gift
வரிகள்: சுவேதா

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ளே தேட

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க


விழியில் விழியில் தங்க ஜரிகை களை பின்னும்
அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்
சரியும் உடையில் ஒரு நிமிஷம்
மல்லிகைச் சரமே பக்கம் கொஞ்சம் வாடி
மூச்சாலே உன்னை நான் முழம் போட
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்


குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களாய் இருந்து
சிணுங்க வேணும் ஒரு நிமிஷம்
வளையம் நெளியும் குட்டி குறும்புகளை பண்ணும்
இடையில் வேணும் ஒரு நிமிஷம்
முத்தாடும் கடலே விட்டுத் தர வேணும்
மீனாகி உன்னை நான் அள்ளிக் குடிக்க
அழகே நீ உன்னை தரணும் ஒரு நிமிஷம்
(அன்னக்கிளி நீ வாடி...)