Friday, August 14, 2009

என்ன அழகு எத்தனை....


படம்: Love Today
இசை: சிவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறுநெஞ்சைக் கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே - எந்தன்
உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசைத் தைத்தாள்
சுட்டும் விழிப் பார்வையில் சுகம் வைத்தாள் - நான்
காதலின் கடலில் விழுந்து விட்டேன் - நீ
கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
(என்ன அழகு...)


அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே - என்
உயிர்போக யோசித்தேன்
நான்காண்டுத் தூக்கம் கெட்டு
இன்றுன்னைச் சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் - அடி
தீக்கூடத் தித்தித்தேன்
மாணிக்கத் தேரே உன்னை
மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது
நிஜம்தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே
(என்ன அழகு...)

நான் கொண்ட ஆசையெல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் - அடி
உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம்தான்
வலியின் கொடுமை முடிய - அடி
தமிழ்வார்த்தை கொஞ்சம்தான்
இன்றேதான் பெண்ணே உன்
முழுப்பார்வை நான் கண்டேன்
கைதொட்ட நேரம் என்
முதல் மூச்சம் நான் கொண்டேன்
மகராணியே மலர்வாணியே இனி
என் ஆவி உன் ஆவியே
(என்ன அழகு...)