Monday, August 17, 2009

காதல் வைத்து...


படம்: தீபாவளி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: நா முத்துகுமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்
(காதல் வைத்து...)
(அசைந்தாய்...)


தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில் தான்
(காதல் வைத்து...)
(அசைந்தாய்...)

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடி
உன்னிடத்தில் நான் போசியதெல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
(காதல் வைத்து...)
(சிரித்தாய்...)
(அசைந்தாய்...)