படம்: Love Today
இசை: சிவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்?
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னைப் பார்த்தால் போதும்
(ஏன்....)
நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும் - நீ
தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை முகம் பார்க்க துடிக்கிது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களில் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா
இதுதான் காதல் சரித்திரமா
(ஏன்....)