Thursday, August 20, 2009

கவிதைகள் சொல்லவா...


படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: பா விஜய்

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா - உன்
கால்த் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
யார் அந்த ரோஜாப்பூ
என் கனவில் மெதுவாக
பூ வீசிப் போனாள் அவள் யாரோ...

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னைக் கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே... (2)
(கவிதைகள்...)


புல்வெளி மீது நடக்காதே
பெயர்ப் பலகைகள் இருக்கு பூங்காவில்
அதை தான் படித்திட காற்றுக்கு
ஓ தெரியாதே தெரியாதே
பூக்களை பூக்களை தீண்டாதே
மலர்க் காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதை தான் வண்டுகள் எப்பவும்தான்
கேட்காதே கேட்காதே
எல்லைக் கோடுகள் தண்டாதே,
உலக தேசங்கள் சொல்லும்
பறவைக் கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும் நம்மை போல்
(கவிதைகள் சொல்லவா…)


காற்றென காற்றென நான் மாறி
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி
ரகசியமாய் நான் சுவாசிக்கவா - ஓ
சுவாசிக்கவா சுவாசிக்கவா
மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி
வானத்தின் இரவுக்கு கொடுத்திடவா - ஓ
கொடுத்திடவா கொடுத்திடவா
கடலின் அலையாக நான் மாறி
உனது பெயர் சொல்லி வரவா
உந்தன் கைக் குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவா
(கவிதைகள் சொல்லவா…)