படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மால்குடி சுபா
வரிகள்: பழனி பாரதி
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே! உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே
(முன் பனியா)
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே....
என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே
(முன் பனியா)
சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு
ஏலோ ஏலோ! ஏலே ஏலோ...
என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...
(முன் பனியா)