Tuesday, August 18, 2009

ஆழியிலே முக்குளிக்கும்...


படம்: தாம் தூம்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிசரண்
வரிகள்: நா முத்துக்குமார்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும்
காற்றாக உரு மாறி
முந்தானை படி ஏறவா
மூச்சோடு குடி ஏறவா
உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சுடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைக்கோர் இலை வைக்கவா

உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா


அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே

அழகே அழகே வியக்கும் அழகே
அழகே அழகே வியக்கும் அழகே