படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜென்சி
வரிகள்: கண்ணதாசன்
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
(இரு பறவைகள்...)
சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புதுவெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மான் ஓட கலை மான் ஆட
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
(இரு பறவைகள்...)
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர் போல
நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல
அவர் காண்கிறார்
நீ என்றும் நான் என்றும்
அழிக்கவும் பிரிக்ககவும் முடியாதம்மா
(இரு பறவைகள்...)