படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுதா ரகுநாதன்
வரிகள்: நா முத்துகுமார்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)
காதல் பெரியதா... காமம் பெரியதா... (2)
தேக சாலையில் நடந்து போகையில்
காமம் பெரியது ஹே ஹே
வேகம் என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே
அட காமம் இல்லா காதல் - அது
கதவே இல்லா வீடு
அட காதல் இல்லா காமம் - அது
வீடே இல்லை காடு
ஏ! காமம் என்பது உடலில் வந்ததும்
மிருகம் எட்டிப் பார்க்கும்
ஏ! காதல் என்பது உயிரில் கலந்ததும்
உன்னைப் புனிதமாக்குக்
உடல் காமம் இறந்து போகும்
உயிர்க் காதல் என்றும் வாழும்
காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே
கூச்சம் நம்மை தீண்டவில்லையே
மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்
ஏ! ஆடை உடலைத் தொட்ட போதிலே
அச்சம் நம்மை விட்டுப் போனதே
வா வா மீண்டும் மழலையாகிப் பார்ப்போம்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா - ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)
கனவு கண்டு வாழ்ந்தால்
அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை
கடலில் பெய்யும் மழையால் - அட
லாபம் ஒன்றும் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)
காதல் பெரியதா... காமம் பெரியதா... (2)
கடையை திறக்கும் போதே - நீ
காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே
நீ - அள்ளிக்கொண்டு ஓடு (5)
அண்டம் முழுதும் ஆசை தானடா
பிண்டம் முழுதும் போதை தானடா
உன்னை என்னை வெற்றிகொள்ள வாடா
கண்டம் உனக்கு பெண்ணில் தானடா
கண்டம் எனக்கு ஆணில் தானடா
தப்பிப் போக தப்பு செய்ய வாடா
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா - ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)
கனவு கண்ட போது - நம்
கண்கள் திறக்க வில்லை
கண்ணைத் திறந்த போது - அந்த
கனவு அங்கு இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா (2)
கடையை திறக்கும் போதே - நீ
காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே
நீ - அள்ளிக்கொண்டு ஓடு (5)
(காதல் பெரியதா)