Wednesday, September 30, 2009

வசந்த கால நதிகளிலே...


படம்: மூன்று முடிச்சு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், MS விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

தூங்காத விழிகள் ரெண்டு...


படம்: அக்னி நட்சத்திரம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
வரிகள்:

தூங்காத விழிகள் ரெண்டு - உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத...)


மாமர இலை மேலே.... ஆ... ஆ...
மாமர இலை மேலே
மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது
நான் தூங்கவோ?

ராத்திரி பகலாக
ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி
தாலாட்டவோ

நாளும் நாளும்
ராகம் தாளம்
சேரும் நேரம்
தீரும் பாரம்

ஆ... ஆ... ஆ...
(தூங்காத....)


ஆலிலை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும்
நிலையென்னவோ

ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும்
கலையல்லவோ

மாதுளங்கனியாட
மலராட கொடியாட
மாருதம் உறவாடும்
கலையென்னவோ

வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத
சுவையல்லவோ

மேலும் மேலும்
மோகம் கூடும்
ஆ.....
தேகம் யாவும்
கீதம் பாடும்
ஆ... ஆ... ஆ....
(தூங்காத...)

அதிசய ராகம்....


படம்: அபூர்வ ராகங்கள்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
(அதிசய...)


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த
மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில்
அவளொரு பாகம் (2)
இந்திர லோகத்துச்
சக்கரவாகம்
(அதிசய...)


பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம் (2)

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி
அவளொரு பைரவி

கையில் மிதக்கும் கனவா நீ...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

கனவா.. நீ காற்றா
கனவா.. இல்லை காற்றா

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா
(கையில்...)


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
ஓ.....
(நிலவில்...)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே (2)
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே
(கையில்...)

காலங்களில் அவள் வசந்தம்...


படம்: பாவ மன்னிப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: PB ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்...)


பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு (2)
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில்...)


பால்போல் சிரிப்பதில் பிள்ளை
பனி போல் அணைப்பதில் கன்னி (2)
கண் போல் வளர்ப்பதில் அன்னை (2)
அவள் கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில்...)

சுந்தரி கண்ணால் ஒரு...


படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வாலி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி...)


வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆ... வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க் களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட
ஏனிந்த சோதனை

வான் நிலவை நீ கேளு
கூறுமென் வேதனை

எனைத்தான்
அன்பே மறந்தாயோ

மறப்பேன்
என்றே நினைத்தாயோ
(என்னையே...)
(சுந்தரி...)


சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தீண்டினால்

காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால்
உயிர் வாழும்

வருவேன்
அந்நாள் வரக் கூடும்
(சுந்தரி)
(என்னையே...)
(சுந்தரி)
(என்னையே...)

அடி ஆத்தாடி...


படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
வரிகள்: வைரமுத்து


அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி...
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...
ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா

உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்

ஆ... அடி ஆத்தாடி
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...


மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டி பாடாதோ

இப்படி நான் ஆனதில்லை
புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பாத்தாயோ
இச கேட்டாயோ...
(அடி ஆத்தாடி...)


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே
என்னை என்ன செய்ய உத்தேசம்

வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப் பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே....
(அடி ஆத்தாடி...)

சின்னச் சின்ன வண்ண...


படம்: மௌனராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜானகி
வரிகள்: வாலி

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
(சின்னச் சின்ன...)


மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை
நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்

சொல்லத்தான் எண்ணியும்
இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ம்....ம்....ம்.....
மஞ்சம் தேடி ம்.....ம்....ம்......
மாலை சூடி ம்....ம்....ம்.....
மஞ்சம் தேடி ம்...ம்....ம்......

காதல் தேவன் சந்நிதி
காண... காணக்காண... காண
(சின்னச் சின்ன...)


மேனிக்குள் காற்று வந்து
மெல்லத்தான் ஆடக்கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓடக்கண்டேன்

இன்பத்தின் எல்லையோ
இல்லையே இல்லையே!
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே

காலம் தோறும் ம்.....ம்.....ம்....
கேட்க வேண்டும் ம்....ம்......ம்....
காலம் தோறும் ம்.....ம்.....ம்....
கேட்க வேண்டும் ம்....ம்......ம்....

பருவம் என்னும் கீர்த்தனம்
பாட... பாடப்பாட... பாட...
(சின்னச் சின்ன...)

பழமுதிர்ச் சோலை...


படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஓ!....ஓ!

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும் (2)
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்...)


தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை
நீர் கொண்டு ஆட

ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று
காவியம் பாட

பறவைகள் போல் நான் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நான் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை
மனம் கொண்டாடுதே!
(பழமுதிர்...)


பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை - என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போலெங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்...)

Tuesday, September 29, 2009

மண்ணில் இந்தக் காதலன்றி...


படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பாவலர் வரதராசன்

மண்ணில் இந்தக் காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில்
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில்
வாழும் மானிடா
(மண்ணில்...)


வெண்ணிலவும் பொன்னி நதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையின் சுகமன்றி

சந்தனமும் சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்குமமுதம்
தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே
இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால்
முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில்
நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும்
அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்...)


முத்துமணி ரத்தினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும்
குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால்
எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால்
அவன் தான் துறவி

முடி முதல் அடி வரை
முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும்
அரங்கமும் அவளல்லவா
(மண்ணில்)

Thursday, September 24, 2009

வசந்தம் பாடி வர...


படம்: ரயில் பயணங்களில்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
(வசந்தம் பாடி வர...)


தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு

ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ புதிரானதோ
(வசந்தம் பாடி வர...)


ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

மாதவள் சிரிப்பினில் மாதவம் கலைந்தது ஏனோ
பேதையின் விழிகளில் போதையும் விளைந்தது தானோ
நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போலொரு
மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ
(வசந்தம் பாடி வர...)

Wednesday, September 23, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்...


படம்: மின்சாரக் கண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்:

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்...)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உதைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்.
(உன் பேர்...)


கண்ணில் கடைக் கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று
மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்...)


நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே

நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால்
ஒளியும் நானே ஆகிறேன்

வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாமின்றி காதல் இல்லையே
காலம் மறைந்த பின்னும் கூந்தல் நரைத்தபின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
(உன் பேர்..)

ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

தினம் தினம் உன் முகம்...


படம்: தங்கைக்கோர் கீதம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்: T ராஜேந்தர்

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா

மைவிழி...
மயக்குதே...

டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை
ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால்
மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம்
தகதகதகதகதக தம் ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம்
தகதகதகதகதக தும்

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா


தவம் கூடச் செய்வேன்
தேவதையே கண்திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றிப் போவாயோ
திரியற்றுக் கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னைத்தானே அழைப்பேன்
நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ
நினைவே நீ வா நீ வா தகதகதகதகதும் ஹோ
(தினம் தினம் உன் முகம்...)
(டிஸ்கோ...)

நல்லவர்க்கெல்லாம்...


படம்: தியாகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம்
சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து
கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
(நல்லவர்க்கெல்லாம்...)


நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
(நல்லவர்க்கெல்லாம்...)


ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
(நல்லவர்க்கெல்லாம்...)

Saturday, September 19, 2009

தாலாட்டும் பூங்காற்று...


படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜானகி
வரிகள்:

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
(தாலாட்டும் பூங்காற்று...)


நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்
(தாலாட்டும் பூங்காற்று...)


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா
(தாலாட்டும் பூங்காற்று...)

Tuesday, September 15, 2009

என் காதலா என்னை...


படம்: இதயமே இதயமே
இசை: சசி ப்ரீதெம்
பாடியவர்கள்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

என் காதலா என்னை
உயிர் வரைக்கும் தீண்டாதே
உன் கைகளால் எந்தன்
உணர்ச்சிகளைத் தூண்டாதே

என் உள்ளத்தில் நீயோ
மோக மழை சிந்தாதே
மாலை வரும் முன்னாலே
மன்மதனே முந்தாதே

என் மேனி சூடானால்
இமய மலை தாங்காதே
(என் காதலா என்னை...)


மண்ணோடு தீ மூண்டால்
உன்னோடு நான் சொல்வேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்

அழகான பொன் வீணை
அடங்காத பெண் வீணை
நீ மீட்டினால் தீருமோ
நீ மீட்டினால் தீருமோ

என் வாழ்வு உன்னோடு
இமை என்றும் கண்ணோடு
பதமான பாலாறு
பதறாமல் நீராடு

என் வாழ்வின் மாற்றங்கள்
நீ செய்த கோளாறு
நீ பேசினால் காதில்
தெவிட்டாத தேன் ஆறு

நீ தீண்டினால் போதும்
எனக்குள்ளே பூக் காடு
உன் மீது தான் ஆசை
எரித்தாலும் போகாது

உன் நேசம் இல்லாமல்
என் சுவாசம் வாழாது
(என் காதலா என்னை...)
(என் காதலா என்னை...)

என்று உன்னைக் கண்டேனோ...


படம்: இதயமே இதயமே
இசை: சசி ப்ரீதெம்
பாடியவர்கள்: மனோ
வரிகள்: வைரமுத்து

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் கண்டேனே தந்தேனே

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் கண்டேனே தந்தேனே

காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது

வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழச் செய்யும்
உன் கண்ணீர்த் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்

ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்


காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது

கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது

காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரைக் கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்

என் நெஞ்சை விட்டு உன் நினைவும் போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது

வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழச் செய்யும்
உன் கண்ணீர்த் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்

ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

Friday, September 11, 2009

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே... (F)


படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், ?
வரிகள்: பழனி பாரதி

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே

காதலில் நான் வளர்த்த
கனவுக்கு ஆயுள் இல்லை
கண்ணுக்குள் நீ குளித்த
கண்ணீரும் காயவில்லை

பூக்களில் வாசமில்லை
வாழ்கையில் ஆசை இல்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
ஆண்டவன் சொல்லவில்லை

உன்னை நினைத்தே உள்ளம் தவிக்க
காத்து நிக்கிறேன் கண்கள் பனிக்க
என்ன நினைத்து என்னை நீ வெறுத்தாய்
பாடும் வீணையின் தந்தியை அறுத்தாய்

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே


பிஞ்சான நாள் முதலாய்
நெஞ்சோடு நீ இருந்தாய்
பதினாறு வருஷம் வைத்த
பாசத்தை என் மறந்தாய்

அன்புக்குத் தவம் இருந்தேன்
சாபங்கள் நீ கொடுத்தாய்
இதயத்தின் துடிப்பை எல்லாம்
மௌனத்தில் உறைய வைத்தாய்

சின்னக் குயிலே சொல்லு பதிலை
ஊமையானதே எந்தன் நிலைமை
காதல் மாலையே தோளிலே சேருமோ
கொஞ்சம் கொஞ்சமாய் ஜீவனும் போகுமோ

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே... (M)


படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனி பாரதி

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா


கண்ணுக்குள் காதல் வைத்தாய்
கண்ணீரை சிரிக்க வைத்தாய்
கலண்டர் தாளை எல்லாம்
சிறகாக ஆக்கிவைத்தாய்

ஊஞ்சலை ஆடவிட்டு
ஓரமாய் நின்றிருந்தாய்
கூந்தலைக் கோதிவிட்டு
என் நெஞ்சில் தலை குளித்தாய்

சுகமானதே இந்த அவஸ்தை
தொலைத்துவிட்டேன் எந்தன் மனதை
நந்தவனமே எனை ஏன் பறித்தாய்
இந்த நிலையை எனக்கேன் கொடுத்தாய்

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா


அவள் பேரைக் கேட்ட பின்னே
என் பேரை மணந்து விட்டேன்
சொல்லத்தான் ஆசை வைத்தேன்
மௌனத்தில் கரைந்து விட்டேன்

கனவோடு வாழுகின்றேன்
கலைந்தாலும் வாடுகின்றேன்
நடுச் சாமம் கண் விழித்து
நான் அவளைத் தேடுகின்றேன்

கனவுகளோ கண்ணில் மிதக்க
நினைவுகளில் நெஞ்சம் பறக்க
கற்பனைகளில் வாழ்வதே வாழ்வா
கண்ணின் மணியே கைகளில் வா வா

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா

காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே...


படம்: காதல்னா சும்மா இல்லை
இசை:
பாடியவர்கள்: சின்மை
வரிகள்:

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தைக் கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடு நாள்... அந்த நெருக்கம்...
நினைத்தே... அது கிடக்கும்...
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மெளனம் ஆகும்...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக் காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில்... அது கிடக்கும்...
நீயும் பார்த்தால்... உயிர் பிழைக்கும்...
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...

என்னமோ செய்தாய் நீ...


படம்: காதல்னா சும்மா இல்லை
இசை:
பாடியவர்கள்: சுஜாதா, உதித் நாராயணன்
வரிகள்:

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

எதிரில் யாரைப் பார்க்கும் போதும்
கண்கள் உன்னைத் தானே தேடும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்
மனசு பறந்து பார்க்கத் தோன்றும்

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

குடைகள் கையில் இருக்கும் போதும்
மழையில் நனைந்து பார்க்கத் தோன்றும்
கொஞ்சம் நெருங்கி பார்க்கத் தோன்றும்
கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்


உன்னைப் பார்க்கும் முன்னே உலகம் சிறியதடி
உன்னைப் பார்த்த பின்னே உலகம் பெரியதடி
ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்
ஓ... என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்

ஓ... நீ பார்க்கும் பார்வை ஒரு நாள்
நான் பார்க்கும் பார்வை ஆகும்

எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும்
பதில்கள் இல்லையே

நதியில் மிதக்கும் இலைக்கு எல்லாம்
நதியின் ஆழம் தெரிவதில்லை
காதல் எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும் அறிவதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ


குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய்
மெதுவாய் மயிலிறகாய்
மனதை வருடுகிறாய்

காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்

ஓ... பூ கோலம் முழுதும் பூ பூத்து
பூ கோலம் ஆனது உன்னாலே
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவை
கேட்டும் பதில்கள் இல்லையே

கண்கள் கடிதம் போட்ட பின்னே
கிளிகள் பறந்து வருதில்லை
கண்கள் விரும்பிப் பார்த்த பின்னே
ஓ... இதயம் முரண்டு பிடிப்பதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

கொஞ்சம் நெருங்கிப் பார்க்க தோன்றும்
கொஞ்சம் திரும்பிப் பார்க்க தோன்றும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்
மனசு பறந்து பார்க்கத் தோன்றும்

சொட்டச் சொட்ட நனையுது... (M)


படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

அடி நீ எங்கே... அடி நீ எங்கே...
அடி நீ எங்கே...அடி நீ எங்கே...அடி நீ எங்கே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக்
கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...


உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் (2)

எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே... மயிலே

உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே... கண்ணே

நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

(சொட்டச் சொட்ட...)

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே (3)
நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே... (3)

சொட்டச் சொட்ட நனையுது... (F)


படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

அடி நீயிங்கே... அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீயிங்கே... அடி நீயிங்கே

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)
(சொட்டச் சொட்ட...)


உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்

உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்

வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு

நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு

இளமையின் தேவை எது எது என்று
அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா

(சொட்டச் சொட்ட...)
(நீயிங்கே நீயிங்கே...)

Thursday, September 10, 2009

கனாக் கண்டேனடி...


படம்: பார்த்திபன் கனவு
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: யுகபாரதி

கனாக் கண்டேனடி... தோழி

கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி...

கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி....

உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகம் எது புறம் எது
புரிந்தது போலே
கனாக் கண்டேனடி...

உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே
கனாக் கண்டேனடி... தோழி
கனாக் கண்டேனடி...


எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக் கொள்ள
நான் கண்டேன்...

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக்கொள்ள
நான் கண்டேன்....

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனாக் கண்டேனடி...)


இடையினில் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள
நான் கண்டேன்...

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்டச் சொட்ட
நான் கண்டேன்......

நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்...

கனாக் கண்டேனடி... தோழி

(கனாக் கண்டேனடி...)

உன்னருகில் வருகையில்...


படம்: கல்லூரி
இசை: ஜோஸ்வா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஹரிணி சுதாகர், ஹரிச்சரண்
வரிகள்: நா முத்துகுமார்

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலைத் தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதில் சொல்லிடவில்லை
(உன்னருகில்...)


உன் கண்கள் மீது ஒரு பூட்டு
வைத்துப் பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி
வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை
வேண்டாமென்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே
வருவதை தடுத்திட முடியாது


என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் விரைகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திடத் துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் எனை எரிக்கும்


கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றித் தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொல்லா ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்

வலியே; என் உயிர்வலியே...


படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்:

வலியே; என் உயிர்வலியே
நீ உலவுகிறாய், என் விழி வழியே
சகியே; என் இளம் சகியே
உன் நினைவுகளால், நீ துரத்துறியே
மதியே; என் முழு மதியே
பெண் பகலிரவாய், நீ படுத்துறியே
நதியே; என் இளம் நதியே
உன் அலைகளினால், நீ உரசுறியே


யாரோ... மனதிலே ...
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே....
தீயா... தெரியலே....

காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமையாகின்றதோ

(வலியே...)


மனம் மனம் எங்கிலும் - ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் - வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ...
முழுமையாய்
நானோ....
வெறுமையாய்
நாமோ...
இனி சேர்வோமா...

(யாரோ...)


மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது - உன்
கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே
என்னுள் வசித்தது - உன்
வார்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா

வெந்நீர் ....
வெண்ணிலா.....
கண்ணீர் ....
கண்ணிலா....
நானும் வெறும் கானலா....

(யாரோ...)

காற்று வந்து மூங்கில் என்னைப்
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமையாகின்றதோ

(வலியே...)
(வலியே...)

தெய்வம் தந்த வீடு...


படம்: அவள் ஒரு தொடர் கதை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ யேசுதாஸ்
வரிகள்:

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன


நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா...
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னைக் கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி

ஆதி வீடு
அந்தம் காடு
இதில் நான் என்ன
அடியே நீ என்ன ஞானப்பெண்ணே

வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன


வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி

கொண்டதென்ன
கொடுப்பதென்ன
இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன



தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி

உண்மை என்ன
பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
(தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...)

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்...


படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றிவிட்டாய்

சிறகைப் போலொரு
வேகத்தில் வேகத்தில்
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்

நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில்
தோன்றிடும் நேரம்

நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக
பார்த்திட வேண்டும்

உயிரே... நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால்... அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

Wednesday, September 9, 2009

அவள் அப்படி ஒன்றும்...


படம்: அங்காடித் தெரு
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்:ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர்
வரிகள்: நா முத்துகுமார்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை


அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலவே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள் அப்படி ஒன்றும்...)


அவள் பட்டுப் புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோசா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள் அப்படி ஒன்றும்...)

ஒரே நாள் உனை நான்...


படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
வரிகள்: வாலி

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
(ஒரே நாள்...)


மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும்
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால்
இனிப்பதென்ன
(ஒரே நாள்...)


நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான்
மயக்கமென்ன
(ஒரே நாள்...)


பஞ்சணை பாடலுக்கு
பல்லவி நீ இருக்க
பஞ்சணை பாடலுக்கு
பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும்
இசை முழங்க
(ஒரே நாள்...)

சரியா இது தவறா...


படம்: கல்லூரி
இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஹரிசரண்
வரிகள்: நா முத்துகுமார்

சரியா இது தவறா
சரியா இது தவறா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட
மனதுக்குத் தெரியல சரியா
காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட
வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேலொரு
மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
(சரியா இது தவறா...)


ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துக்கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்குப் பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் தூண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தித் தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா...
(சரியா இது தவறா...)


ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதைப் படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தைக் கட்டிப் போடத் தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடுத் தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழுதுகள் ரெண்டு
தொடத் தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளிச் செல்லுது மேகம் ஒன்று
இது சரியா...
(சரியா இது தவறா...)

Friday, September 4, 2009

பரவசம் பரவசம்....


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ரெஹானா, கங்கா, பெ(f)பி, பெ(f)ஜி, பூர்ணிமா
வரிகள்: நா முத்துகுமார்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம் பரவசம்
பரவசம் பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

ராத்திரியின் சொந்தக்காரா
ரகசியப் போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம்
தனியாகக் குளித்தால் கஞ்சம்
ஒன்றாகக் குளித்திட வருவாயா

பார்த்தாலே பரவசமே

பரவசம் பரவசம்
உன்னைப் பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்
உன்னைப் பார்த்தால் பரவசம்
(ராத்திரியின் சொந்தக்காரா...)


தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ....

அட வள்ளுவரும் உனக்கென்ன உறவா
இரு ஊதடுகள் ரெண்டு வரி குறளா
இன்பம் பலமுறை தருவாயா தருவாயா
எங்கள் காதலும் காப்பியும் ஒன்று
ரெண்டும் சுடச் சுட குடித்தால் நன்று
மெல்லச் சுவைதிட வருவாயா
வருவாயா வருவாயா வருவாயா

நான் வெண்மை போலவே
உன்னை தின்னவா நாதா
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னால் சாதா
(ராத்திரியின் சொந்தக்காரா...)


தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே
மனம் நச்சரிக்கும் சுவர் கொள்ளி போலே
என் காயத் தீ இவன் திறந்தானா நீதானே
சிவகாசியின் தீப்பொறி எடுத்து
சிறு புஞ்சியின் ஈரப்பதம் கொடுத்து
கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா

நீ வீதி வலம் வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
இங்கு என்னை தவிர
ஆண்களுக்கம் பெண்களுக்கும் நீதான் அண்ணா

தப்பிச்சிக்கோ...

(ராத்திரியின் சொந்தக்காரா...)

பார்த்தாலே பரவசமே

தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ
தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ தப்பிச்சிக்கோ

நீதான் என் தேசிய கீதம்...


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா
வரிகள்: வாலி

காதலே ஜெயம்....

நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
(நீதான் என் தேசிய கீதம்...)


என் பிறவா மழலைகளை - உன்
விழியில் பார்க்கிறேன்
என் பிறவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன் - நான்
எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் - உன்
மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் - உன்
வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் - உன்
உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம் காண்பது உன் மயம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
(நீதான் என் தேசிய கீதம்...)


உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன் - வெறும்
உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன்
நாம் இறந்தும் இறவா நிலை
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்க்கிறேன்
எல்லா எழுத்துக்கும்
உயிர் தொடக்கம்
உயிர் தொடக்கம் - என்
எல்லா உணர்வுக்கும் - என்
எல்லா உணர்வுக்கும்
நீ தொடக்கம்
நீ தொடக்கம்
காதலே ஜெயம்

காதலே ஜெயம்
அது கடவுளின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீ தான் என் தேசிய கீதம்
உன் ஒரே பாடலே
உயிர்க் காதலே - என்
மரியாதைக்கு உரியவனே - இந்த
மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா

Thursday, September 3, 2009

நான் அவன் இல்லை...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி, சருலதாமணி, மாயா, மேகா, வினயா
வரிகள்: பா விஜய்

காக்க காக்க கனம் காக்க கனம் காக்க காக்க
தாக்க தாக்க அங்கம் தாக்க அங்கம் தாக்க தாக்க
நோக்க நோக்க பெண்ணை நோக்க பெண்ணை நோக்க நோக்க
பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க மொத்தம் பார்க்க பார்க்க
மன்னவன் வந்தானடி என் தோழி

இமையில் சாய்த்தாய்
இதழில் தேய்த்தாய்
முதலில் எடுத்தாய்
முழுக்க கொடுத்தாய்
நான் நான் நான் நான்
No no no no; no no no no
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை


உடை மாற்றினாய்
எந்தன் உயிர் மாற்றினாய்
நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்
தடம் மாற்றினாய்
என்னில் தனல் ஏற்றினாய்
தாங்காத சுகம் ஊற்றினாய்
இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்
நீதான் நீதான் தொட்டது நீதான்
ஆடை மறைவை சுட்டது நீதான்
நான் நான் நான் நான்
No no no no; no no no no
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை


அசைத்தாய் நீயே
கொஞ்ச அழைத்தாய் நீயே
என்னை அழகாக அழைத்தாய் நீயே
வளைத்தாய் நீயே
மனம் துளைத்தாய் நீயே
குடை போல் என்னை விரித்தாய் நீயே
என்னை உடை போல் தரித்தாய் நீயே
அம்பை என்மேல் ஏய்ததும் நீயே
காமக் கனியை கொய்தும் நீயே
நான் நான் நான் நான்
No no no no; no no no no
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை


ஹெய் ஹெய்
ஹெய் நீ அவனே தான்
நீ அவனே தான்
நீ அவனே தான்
திரும்ப திரும்ப பொய் சொல்லடா
நீ அவனே தான்

ஹெய் பழம் நீ அப்பா
காம பழம் நீ அப்பா
எந்தன் பருவத்தின் பசி நீ அப்பா
டேய் சுகம் நீ அப்பா
எந்தன் சுகம் நீ அப்பா
ஒரு சூடான புயல் நீ அப்பா
என்னை சூடாக்கும் அனல் நீ அப்பா

யப்பா யப்பா
மோகம் நீ அப்பா
யப்பா யப்பா
தேகம் நீ அப்பா

நான் நான் நான் நான்
இல்லை இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை அப்பா
நான் அவன் இல்லை
நீ அவனே தான்
நான் அவன் இல்லை

நீ கவிதை எனக்கு...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: கிருஷ், மேகா
வரிகள்:

நீ கவிதை எனக்கு
நான் ரசிகை உனக்கு
பாவம்; ப ப ப பாவம்
நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா ப ப பம், பா ப ப பம்
(நீ கவிதை எனக்கு...)

உடல் முழுக்க நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும் கலையே
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே
முதல் இரவே - ஓ ஹோ ஹோ
உடை அணிந்து உருளும் நிலவே
தடை கடந்து திரளும் வளைவே
எடை மறந்து சுமந்தாய் எனையே
துணையே...
(நீ கவிதை எனக்கு...)


சத்தம் போடும் உந்தன் வளையல்
காலை வரைக்கும் வேண்டாமே
அஹ் குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்
தேவை இல்லை தானோ
கூந்தல் அதில் சிக்கி மாடிக் கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா - ஓ ஹோ
இன்னும் கையில் இடைஞ்சல்கள் செய்யுதே
மோதிரங்கள் ஏனோ
ஒட்டிகொண்டு ஊஞ்சல் ஆடும் இந்த பொன் வேளையில்
ஒட்டியாணம் தேவை தானா
உந்தன் பொன் மேனியில்
(நீ கவிதை எனக்கு...)


தள்ளிப் போடா
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
வேணும் வேணும் வேணும்
தள்ளிப் போடா போடா

காதல் வந்து மூடிக்கின்ற இடத்தில்
காமமில் ஆரம்பம்
காமம் வந்து மூடிக்கின்ற இடதில்
காதல் மீண்டும் தோன்றும்

ஆ.. அசை வந்து வழிகின்ற இடதில்
கூச்சல் போட சந்தோஷம்
ஆடை வந்து நழுவிடும் இடதில்
மௌனம் தானே பேசும்
மெத்தை கூட இந்த நேரம்
மூச்சு தான் வாங்குது
தேகத்துக்கு தேகம் தானே
போர்வையாய் மாறுது
(நீ கவிதை எனக்கு...)

Wednesday, September 2, 2009

அபிஷேக நேரத்தில்...


படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரையேறி வா
கண்ணே வா கரையேறி வா
அம்மா தாயே வா... புண்ணியம்
(அபிஷேக நேரத்தில்...)


காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறக்க, உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடி யம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
உன் காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி
(அபிஷேக நேரத்தில்...)


மேனி நோகாமல் மெல்லத் தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
மேனி நோகாமல் மெல்லத் தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி
அடி வசந்தி; துணை வருமோ இதுபோல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்ததப் பத்தி
கண்ணால் ரெண்டில் முத்திரை குத்தி
என்னைக் கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி
(அபிஷேக நேரத்தில்...)


காதலின் தீபமொன்று...


படம்: தம்பிக்கு எந்த ஊரு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்


நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும்
சொல்ல......வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்


என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்து
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல......வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

இது காதலா முதல் காதலா...


படம்: துள்ளுவதோ இளமை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: பா விஜய்

I think I'm in love with you
No no no no; Well I've been thinking about you
May be; I'm in love with you
I really don't know...

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தைதான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒரு வித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்குதான் உன் கையிலே

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதைக் கிறுக்குக்கெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடிப் போனதே

இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே
என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை
புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன்

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதைக் கிறுக்குக்கெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதைக் கிறுக்குக்கெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

சுடிதார் அணிந்து வந்த...


படம்: பூவெல்லாம் கேட்டு பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்:

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...)


உன் பேரை சொன்னாலே நான் திரும்பிப் பார்கிறேன்
உன் பேரை மட்டும் தான் நான் விரும்பிக் கேட்கிறேன்
இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னைக் கழித்துவிட்டேன் உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா
(உன்மேல் நான் கொண்ட காதல்...)


பலகோடி பெண்களிலே எதற்கேன்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னைக் கொஞ்சத் தோன்றுமா
அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ

(உன்மேல் நான் கொண்ட காதல் )
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )

காதல் செய்தால் பாவம்...


படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களாய் தைத்தாய்
என் விழியை வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்ததே தவறா

உயிரே.... உயிரே....

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே


காதல்... வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே

என் உயிரோடு கலந்தவள் நீதான்
ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ
சொல் கண்ணே

மௌனம் பேசிதே
உனக்கது தெரியலயா
காதல் வார்த்தைகளை
கண்கள் அறியலையா
(காதல் செய்தால் பாவம்...)

துணையின்றித் தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென வந்தாயே என் வழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து
நான் சொன்னென்
உன் காதல் வெறோர் மனதில்
எனை நொந்தேன்

கண்கள் உள்ளவரை
காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை
ஆண்கள் ஜெயிப்பதில்லை

(காதல் செய்தால் பாவம்...)

Tuesday, September 1, 2009

ராதா காதல் வராதா...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:

ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே (4)

கோகுல பாலா கோமகள் ராதா (2)
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா (2)
கோகுல பாலா கோமகள் ராதா (2)
கோகுல பாலா கோகுல பாலா (2)

ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ..... லீலை தொடராதா

ராதா காதல் வராதா
ரா....தா ராதா காதல் வரா...தா


செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்
இடையணி இருக்க உடை மட்டும் நழுவும்
இடையணி இருக்க உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா - ராதா
சுகம் என்ன சொல்லடி ராதா

ராதா காதல் வராதா
ரா...தா... காதல் வரா... தா

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (6)

மந்தார மழை மேகம்
நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி
மந்தார மழை மேகம்
நின்றா.......டும் விழி வண்டு
கொண்டாடும் இசையென்னடி
தாளாத இடை மீது தள்ளாடும் மணிச்சங்கு
ஆ...டாதோ உன் கை வழி
மார்கழி ஓடை போலொரு ஆடை
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா - ராதா
என்னிடம் என்னடி ராதா

(ராதா காதல் வராதா ...)

ராதா காதல் வராதா
ரா...தா... காதல் வரா... தா

கோகுல பாலா கோமகள் ராதா (2)
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா (2)
கோகுல பாலா கோமகள் ராதா (2)

ஏன் எனக்கு மயக்கம்...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ஜெய்தேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்:

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்... பறந்தேன்.. ஹோ
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னைக் கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்... கலைந்தேன்
(ஏன் எனக்கு...)


சம்மதமா சேலை போர்வை போர்த்திக் கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் மூட்டிட
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னைத் தாங்கி வாழ சம்மதம்
உன்னைத் தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்
(ஏன் எனக்கு...)


காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள்க் கைதி ஆவோமா
ஆசைக் குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா
லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்தப் பெண்ணைக் காணும் போதும் உன்னைப் பார்க்கிறேன்
உன்னைக் காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்
(ஏன் எனக்கு...)