படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து
அடி நீயிங்கே... அடி நீயிங்கே...
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே... அடி நீயிங்கே
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)
(சொட்டச் சொட்ட...)
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று
அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா
(சொட்டச் சொட்ட...)
(நீயிங்கே நீயிங்கே...)