படம்: ரயில் பயணங்களில்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
(வசந்தம் பாடி வர...)
தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு
ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ புதிரானதோ
(வசந்தம் பாடி வர...)
ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க
மாதவள் சிரிப்பினில் மாதவம் கலைந்தது ஏனோ
பேதையின் விழிகளில் போதையும் விளைந்தது தானோ
நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போலொரு
மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ
(வசந்தம் பாடி வர...)