Thursday, September 10, 2009

கனாக் கண்டேனடி...


படம்: பார்த்திபன் கனவு
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: யுகபாரதி

கனாக் கண்டேனடி... தோழி

கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி...

கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி
கனாக் கண்டேனடி....

உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகம் எது புறம் எது
புரிந்தது போலே
கனாக் கண்டேனடி...

உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே
கனாக் கண்டேனடி... தோழி
கனாக் கண்டேனடி...


எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக் கொள்ள
நான் கண்டேன்...

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக்கொள்ள
நான் கண்டேன்....

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனாக் கண்டேனடி...)


இடையினில் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள
நான் கண்டேன்...

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்டச் சொட்ட
நான் கண்டேன்......

நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்...

கனாக் கண்டேனடி... தோழி

(கனாக் கண்டேனடி...)