படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனி பாரதி
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
கண்ணுக்குள் காதல் வைத்தாய்
கண்ணீரை சிரிக்க வைத்தாய்
கலண்டர் தாளை எல்லாம்
சிறகாக ஆக்கிவைத்தாய்
ஊஞ்சலை ஆடவிட்டு
ஓரமாய் நின்றிருந்தாய்
கூந்தலைக் கோதிவிட்டு
என் நெஞ்சில் தலை குளித்தாய்
சுகமானதே இந்த அவஸ்தை
தொலைத்துவிட்டேன் எந்தன் மனதை
நந்தவனமே எனை ஏன் பறித்தாய்
இந்த நிலையை எனக்கேன் கொடுத்தாய்
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
அவள் பேரைக் கேட்ட பின்னே
என் பேரை மணந்து விட்டேன்
சொல்லத்தான் ஆசை வைத்தேன்
மௌனத்தில் கரைந்து விட்டேன்
கனவோடு வாழுகின்றேன்
கலைந்தாலும் வாடுகின்றேன்
நடுச் சாமம் கண் விழித்து
நான் அவளைத் தேடுகின்றேன்
கனவுகளோ கண்ணில் மிதக்க
நினைவுகளில் நெஞ்சம் பறக்க
கற்பனைகளில் வாழ்வதே வாழ்வா
கண்ணின் மணியே கைகளில் வா வா
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா