Wednesday, September 2, 2009

காதல் செய்தால் பாவம்...


படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களாய் தைத்தாய்
என் விழியை வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்ததே தவறா

உயிரே.... உயிரே....

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே


காதல்... வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே

என் உயிரோடு கலந்தவள் நீதான்
ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ
சொல் கண்ணே

மௌனம் பேசிதே
உனக்கது தெரியலயா
காதல் வார்த்தைகளை
கண்கள் அறியலையா
(காதல் செய்தால் பாவம்...)

துணையின்றித் தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென வந்தாயே என் வழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து
நான் சொன்னென்
உன் காதல் வெறோர் மனதில்
எனை நொந்தேன்

கண்கள் உள்ளவரை
காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை
ஆண்கள் ஜெயிப்பதில்லை

(காதல் செய்தால் பாவம்...)