படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே (4)
கோகுல பாலா கோமகள் ராதா (2)
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா (2)
கோகுல பாலா கோமகள் ராதா (2)
கோகுல பாலா கோகுல பாலா (2)
ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ..... லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ரா....தா ராதா காதல் வரா...தா
செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்
இடையணி இருக்க உடை மட்டும் நழுவும்
இடையணி இருக்க உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா - ராதா
சுகம் என்ன சொல்லடி ராதா
ராதா காதல் வராதா
ரா...தா... காதல் வரா... தா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (6)
மந்தார மழை மேகம்
நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி
மந்தார மழை மேகம்
நின்றா.......டும் விழி வண்டு
கொண்டாடும் இசையென்னடி
தாளாத இடை மீது தள்ளாடும் மணிச்சங்கு
ஆ...டாதோ உன் கை வழி
மார்கழி ஓடை போலொரு ஆடை
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா - ராதா
என்னிடம் என்னடி ராதா
(ராதா காதல் வராதா ...)
ராதா காதல் வராதா
ரா...தா... காதல் வரா... தா
கோகுல பாலா கோமகள் ராதா (2)
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா (2)
கோகுல பாலா கோமகள் ராதா (2)