Wednesday, September 30, 2009

அதிசய ராகம்....


படம்: அபூர்வ ராகங்கள்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
(அதிசய...)


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த
மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில்
அவளொரு பாகம் (2)
இந்திர லோகத்துச்
சக்கரவாகம்
(அதிசய...)


பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம் (2)

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி
அவளொரு பைரவி