Wednesday, September 23, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்...


படம்: மின்சாரக் கண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்:

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்...)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உதைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்.
(உன் பேர்...)


கண்ணில் கடைக் கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று
மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்...)


நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே

நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால்
ஒளியும் நானே ஆகிறேன்

வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாமின்றி காதல் இல்லையே
காலம் மறைந்த பின்னும் கூந்தல் நரைத்தபின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
(உன் பேர்..)

ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்