Tuesday, September 15, 2009

என் காதலா என்னை...


படம்: இதயமே இதயமே
இசை: சசி ப்ரீதெம்
பாடியவர்கள்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

என் காதலா என்னை
உயிர் வரைக்கும் தீண்டாதே
உன் கைகளால் எந்தன்
உணர்ச்சிகளைத் தூண்டாதே

என் உள்ளத்தில் நீயோ
மோக மழை சிந்தாதே
மாலை வரும் முன்னாலே
மன்மதனே முந்தாதே

என் மேனி சூடானால்
இமய மலை தாங்காதே
(என் காதலா என்னை...)


மண்ணோடு தீ மூண்டால்
உன்னோடு நான் சொல்வேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்

அழகான பொன் வீணை
அடங்காத பெண் வீணை
நீ மீட்டினால் தீருமோ
நீ மீட்டினால் தீருமோ

என் வாழ்வு உன்னோடு
இமை என்றும் கண்ணோடு
பதமான பாலாறு
பதறாமல் நீராடு

என் வாழ்வின் மாற்றங்கள்
நீ செய்த கோளாறு
நீ பேசினால் காதில்
தெவிட்டாத தேன் ஆறு

நீ தீண்டினால் போதும்
எனக்குள்ளே பூக் காடு
உன் மீது தான் ஆசை
எரித்தாலும் போகாது

உன் நேசம் இல்லாமல்
என் சுவாசம் வாழாது
(என் காதலா என்னை...)
(என் காதலா என்னை...)