Tuesday, September 1, 2009

ஏன் எனக்கு மயக்கம்...


படம்: நான் அவன் இல்லை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ஜெய்தேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்:

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்... பறந்தேன்.. ஹோ
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னைக் கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்... கலைந்தேன்
(ஏன் எனக்கு...)


சம்மதமா சேலை போர்வை போர்த்திக் கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் மூட்டிட
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னைத் தாங்கி வாழ சம்மதம்
உன்னைத் தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்
(ஏன் எனக்கு...)


காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள்க் கைதி ஆவோமா
ஆசைக் குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா
லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்தப் பெண்ணைக் காணும் போதும் உன்னைப் பார்க்கிறேன்
உன்னைக் காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்
(ஏன் எனக்கு...)