படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், ?
வரிகள்: பழனி பாரதி
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே
காதலில் நான் வளர்த்த
கனவுக்கு ஆயுள் இல்லை
கண்ணுக்குள் நீ குளித்த
கண்ணீரும் காயவில்லை
பூக்களில் வாசமில்லை
வாழ்கையில் ஆசை இல்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
ஆண்டவன் சொல்லவில்லை
உன்னை நினைத்தே உள்ளம் தவிக்க
காத்து நிக்கிறேன் கண்கள் பனிக்க
என்ன நினைத்து என்னை நீ வெறுத்தாய்
பாடும் வீணையின் தந்தியை அறுத்தாய்
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே
பிஞ்சான நாள் முதலாய்
நெஞ்சோடு நீ இருந்தாய்
பதினாறு வருஷம் வைத்த
பாசத்தை என் மறந்தாய்
அன்புக்குத் தவம் இருந்தேன்
சாபங்கள் நீ கொடுத்தாய்
இதயத்தின் துடிப்பை எல்லாம்
மௌனத்தில் உறைய வைத்தாய்
சின்னக் குயிலே சொல்லு பதிலை
ஊமையானதே எந்தன் நிலைமை
காதல் மாலையே தோளிலே சேருமோ
கொஞ்சம் கொஞ்சமாய் ஜீவனும் போகுமோ
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே