படம்: கல்லூரி
இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஹரிசரண்
வரிகள்: நா முத்துகுமார்
சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட
மனதுக்குத் தெரியல சரியா
காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட
வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேலொரு
மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
(சரியா இது தவறா...)
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துக்கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்குப் பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் தூண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தித் தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா...
(சரியா இது தவறா...)
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதைப் படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தைக் கட்டிப் போடத் தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடுத் தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழுதுகள் ரெண்டு
தொடத் தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளிச் செல்லுது மேகம் ஒன்று
இது சரியா...
(சரியா இது தவறா...)